Steven Smith Catch: தப்பு பண்ணீட்டீங்க தம்பி; ஸ்மித் நிற்கும் போது இங்க பந்த தட்டி விடலாமா? பரிதாபமாக வெளியேறிய ஹர்திக்..!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மிகச் சிறப்பான கேட்ச்சினை ஸ்டீவ் ஸ்மித் பிடித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மிகச் சிறப்பான கேட்ச்சினை ஸ்டீவ் ஸ்மித் பிடித்தார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு அடிமேல் அடி விழுந்தவாறு இருந்தது. இந்திய அணி தரப்பில் ஒருவர் கூட சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்பதை விட, ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்து வீசினர் எனக் கூறலாம். ஆனால் அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பீல்டிங்கும் செய்தனர்.
இந்திய அணி 10வது ஓவரின் தொடக்கத்தில் 50 ரன்கள் கூட சேர்க்காமல், 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது அந்த ஓவரினை ஆஸ்திரேலிய அணியின் சீன் அபோட் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை ஹர்திக் பாண்டியா எதிர் கொண்டார். அந்த பந்தை ஹர்திக் பாண்டியா லாவகமாக தட்டிவிடுவதாக நினைத்து பாய்ண்ட் திசையில் பந்தை தட்டி விட்டார். அப்போது அங்கு நின்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நொடிக்கும் குறைவான நேரத்தில் பறந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் கட்டுத் தீ போல் பறவி வருகிறது. இந்த கேட்ச்க்காக ஸ்மித்தை பலரும் பாராட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட 34 வயதாக்கூடிய ஸ்மித் மிகச்சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Top class catch by Steve Smith@stevesmith49 #INDvsAUS pic.twitter.com/n6PmOB6aEi
— Nitin Godbole 🇮🇳 (@nitingodbole) March 19, 2023
இதனை துளியும் எதிர்பாராத ஹர்திக் பாண்டியா வெறும் ஒரு ரன் சேர்த்த நிலையில் வெளியேறினார். ஸ்மித் பாராட்டப்படும் அதே நேரத்தில் அணி தடுமாறிக் கொண்டு இருக்கும் போது, மிகவும் மந்தமான பேட்டிங் செய்து தனது விக்கெட்டை பறிகொடுத்த ஹர்திக் பாண்டியா மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.