IND vs AUS, 1st ODI: பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா; மிரளாமல் நின்ற கே.எல். ராகுல்; 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்த நிலையில் நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, மெல்ல மெல்ல மீட்ட கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜா கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், அட்டாக்கிங் ஸ்டைலில் பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகிக்கிறது.