IND vs AFG 3rd T20: ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்; ஆஃப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
IND vs AFG 3rd T20: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கன்வே 2-0 என்ற கணக்கில் வென்று விட்ட நிலையில் மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கின்றது.
இரு அணிகளின் ப்ளேயிங் லெவன்
ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நயீப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, முகமது சலீம் ஏ சஃபி, மலீத்
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான்