மேலும் அறிய

T20 World Cup Qualifier 2024: 2 இடங்களுக்காக 10 அணிகள் மோதல்.. மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று அட்டவணை வெளியீடு!

2024 மகளிர் டி20 உலகக் கோப்பையின் கடைசி இரண்டு இடத்திற்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கு முன், தகுதிச் சுற்றுகள் மூலம் கடைசி இரண்டு இடங்களுக்கு 10 அணிகள் போட்டியிட இருக்கின்றன. இந்த தகுதி சுற்றுப் போட்டியானது வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்காக அபுதாபியில் இரண்டு ஸ்டேடியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாலரன்ஸ் ஓவல் மற்றும் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவை அடங்கும். இதில் தகுதிபெறும் இரண்டு அணிகளும் இந்த ஆண்டு இறுதியில் வங்கதேச மண்ணில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும். 

எந்தெந்த அணிகள் பங்கேற்பு..?

2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். இதில் முந்தைய போட்டியின் டாப்-6 அணிகள் அதாவது 2023 டி20 உலகக் கோப்பையில் முதல் 6 இடங்களை பிடித்த அணி தகுதி பெற்றது. இது தவிர, உலகக்கோப்பையை நடத்தும் வங்கதேசமும், ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. கடந்த சீசனின் டாப்-6 அணிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் 8 அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில் 2 அணிகள் தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். 

அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, வனுவாடு மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கிறது. இதில், இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெறும். 

எந்த அணி முதல் தகுதி சுற்றில் மோதுகிறது..? 

தகுதிச் சுற்று முதல் போட்டியில் இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. தகுதிச் சுற்றுக்கு விளையாடும் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இலங்கை, தாய்லாந்து, ஸ்காட்லாந்து, உகாண்டா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர, குரூப் பி - அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வனுவாட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அப்போது இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் தகுதி பெறும்.

முழு அட்டவணை இதோ: 

தேதி             

மோதும் அணிகள்

போட்டி நடைபெறும் இடம்

ஏப்ரல் 25

இலங்கை vs தாய்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

ஏப்ரல் 25

ஸ்காட்லாந்து vs உகாண்டா

டாலரன்ஸ் ஓவல்

ஏப்ரல் 25

அயர்லாந்து vs யுஏஇ

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

ஏப்ரல் 25

ஜிம்பாப்வே vs வனுவாடு

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

27 ஏப்ரல்

வனுவாட்டு vs நெதர்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

27 ஏப்ரல்

யுஏஇ vs ஜிம்பாப்வே

டாலரன்ஸ் ஓவல்

27 ஏப்ரல்

உகாண்டா vs அமெரிக்கா

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

27 ஏப்ரல்

ஸ்காட்லாந்து vs இலங்கை

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

29 ஏப்ரல்

அமெரிக்கா vs ஸ்காட்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

29 ஏப்ரல்

உகாண்டா vs தாய்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

29 ஏப்ரல்

அயர்லாந்து vs ஜிம்பாப்வே

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

29 ஏப்ரல்

நெதர்லாந்து vs UAE

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 1 

ஜிம்பாப்வே vs நெதர்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

மே 1 

வனுவாட்டு vs அயர்லாந்து

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 1 

இலங்கை vs உகாண்டா

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 1 

தாய்லாந்து vs அமெரிக்கா

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 3

தாய்லாந்து vs ஸ்காட்லாந்து

டாலரன்ஸ் ஓவல்

மே 3

அமெரிக்கா vs இலங்கை

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 3

uae vs vanuatu

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 3

நெதர்லாந்து vs அயர்லாந்து

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 5

முதல் அரையிறுதி

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 5

இரண்டாவது அரையிறுதி

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மே 7

இறுதிப்போட்டி

சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: “சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்”  - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
“சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்” - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
TN 12th Revaluation 2024: பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
"மாணவர்களின் கனவுக்கு துரோகம்" நீட் தேர்வுத்தாள் கசிவா? கொதித்தெழுந்த ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

12th Result 2024 | +2 தேர்வு முடிவுகள்! எந்த மாவட்டம் முதலிடம்? முழு விவரம்Modi in Ram Temple | நெருங்கும் தேர்தல் ரிசல்ட் அயோத்தி கோயிலில் மோடி வேதமந்திரங்கள் முழங்க தரிசனம்Vairamuthu | ”இளையராஜாவா? வேணா வேற எதாவுது கேளுங்க” கடுப்பான வைரமுத்துDK Shivakumar : மேலே கை போட்ட தொண்டர் ஓங்கி அறைந்த  DK சிவக்குமார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: “சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்”  - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
“சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆவேன்” - சாதிய கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிரத்யேக பேட்டி
TN 12th Revaluation 2024: பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பிளஸ் 2 மதிப்பெண்‌ மறுகூட்டல்‌, விடைத்தாள்‌ நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
"மாணவர்களின் கனவுக்கு துரோகம்" நீட் தேர்வுத்தாள் கசிவா? கொதித்தெழுந்த ராகுல் காந்தி!
12th Result 2024: சென்னையில் ஒரே ஒரு அரசு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி - கல்வியாளர்கள் பெரும் வேதனை
சென்னையில் ஒரே ஒரு அரசு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி - கல்வியாளர்கள் பெரும் வேதனை
Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?
Kodaikanal: நாளை முதல் கொடைக்கானல் வர இ - பாஸ் கட்டாயம்! எப்படி பெறுவது?
TN Headlines: திருப்பூர் மாணவி முதலிடம்! கனமழைக்கு வாய்ப்பு - இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: திருப்பூர் மாணவி முதலிடம்! கனமழைக்கு வாய்ப்பு - இதுவரை இன்று நடந்தது?
Naan Mudhalvan Scheme: கை கொடுத்த நான் முதல்வன் திட்டம்: பிளஸ் 2 மார்க் வந்த கையோடு பணியை பெற்ற சிவானிஸ்ரீ: எப்படி?
Naan Mudhalvan Scheme: கை கொடுத்த நான் முதல்வன் திட்டம்: பிளஸ் 2 மார்க் வந்த கையோடு பணியை பெற்ற சிவானிஸ்ரீ: எப்படி?
Embed widget