ICC Review: ‛நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்...’ விராட் கோலி பற்றி ரிக்கி பாண்டிங் ஓப்பன் டாக்!
ICC Review: விராட் கோலி என் எதிர் அணியில் விளையாடுகிறார் என்றால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி என் எதிர் அணியில் விளையாடுகிறார் என்றால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகின் ரன் மிஷின் என அழைப்படுகிற நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. இவர் சமீப காலமாக தனது இயல்பான விளையாட்டினை விளையாடாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறார். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து தடுமாறி வருகிறார். ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் பெரும், ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி-20 உலககோப்பைக்கான அணிகள் பற்றிய ரிவியூவ் நிகழ்ச்சி ஐசிசியால் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் கூறியுள்ளது அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. ரிக்கி பாண்டிங் கூறியதாவது,
“ விராட் கோலி தொடர்ந்து தடுமாறி வருகிறார் என்பதை நானும் கவனித்து வருகிறேன். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதேநேரத்தில் அவர் ஐபிஎல் போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடவில்லை. அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தனது இயல்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. அதற்காக அவரை அணியில் இருந்து, நீக்கும் முடிவினை நான் இந்திய அணியில் இருந்தால் எடுக்க மாட்டேன். மேலும், நான் விளையாடும் அணிக்கு எதிர் அணியில் விராட் கோலி விளையாடுகிறார் என்றால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்.
அவர் ஒரு போட்டியின் தன்மையினை தன்னை மையப்படுத்தியதாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவர். மேலும், உலகின் அனைத்து விளையாட்டு வீரர்களும், ஏன் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவுட் ஆஃப் ஃபார்முக்கு செல்வதை தவிர்க்க முடியாத ஒன்று. அதனை எல்லா வீரர்களும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.
விராட்டுக்கு அதற்கான காலத்தினை அணி நிச்சயம் வழங்க வேண்டும். நான் அணியில் இருந்தால் அவரை எப்போதும் அணியில் தக்கவைத்துக்கொள்ளப் பார்ப்பேன். மேலும் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேனை அணியில் நிலைத்திருக்கச் செய்து அவர் மீண்டு வர அவருக்கான காலத்தினை கொடுப்பேன். மேலும் இந்திய அணி விராட் எந்த விக்கெட்டுக்கு களமிறங்குகிறார் என்பதை முடிவு செய்து, அவரை தொடர்ந்து களமிறக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அவர் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அதுபோல் இந்திய அணி அவருக்கு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். விராட் கோலி பற்றிய ரிக்கி பாண்டிங் கூறியுள்ள இந்த கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்