மேலும் அறிய

ICC World Cup 2023 Ticket: இந்த போட்டிக்கு இவ்வளவு, மற்ற போட்டிக்கு அவ்வளவு! வெளியானது உலகக்கோப்பைக்கான டிக்கெட் விலை!

உலகக் கோப்பையின் இரண்டாவது இறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதி பெங்கால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அறிவிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் டிக்கெட் விலை எவ்வளவு என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலகக் கோப்பையின் இரண்டாவது இறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதி பெங்கால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பெங்கால் கிரிக்கெட் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ..900 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. 

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இந்தியா- தென்னாப்பிரிக்கா போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ.900 முதல் ரூ.3,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த டிக்கெட் விலையாக ரூ. 900 மேல் அடுக்குக்கும், B, L பிளாக் டிக்கெட்டின் விலை 3000 ரூ.பாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டு போட்டிகளுக்கு ரூ. 1500 (டி, எச் பிளாக்) மற்றும் ரூ. 2500 (சி, கே பிளாக்) இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் 63,500 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 5 போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்கள் ஸ்வாரஷ்ய குறைவாக இருக்கும் என்பதால் இந்தப் போட்டியைப் பார்க்க, ரசிகர்கள் ரூ..650 (மேல் அடுக்கு) முதல் ரூ..1500 (பி, சி, கே, எல் பிளாக்) இருக்கும். மேலும்,  டி மற்றும் எச் பிளாக்கிற்கு ரூ..1,000 டிக்கெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, இந்த மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ.800 (மேல் அடுக்கு), ரூ.1200 (டி, எச் பிளாக்), ரூ.2000 (சி, கே பிளாக்) மற்றும் ரூ..2200 (பி, எல் பிளாக்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து போட்டி:

மேல் அடுக்குகள்: ரூ. 650 (தலைக்கு)
D H பிளாக்கள்: ரூ. 1000
B CKL பிளாக்கள்: ரூ. 1500

இங்கிலாந்து vs பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் vs பாகிஸ்தான் போட்டிகள்:

மேல் அடுக்குகள்: ரூ. 800
D H பிளாக்கள்: ரூ. 1200
C K பிளாக்கள்: ரூ. 2000
B L பிளாக்கள்: ரூ. 2200

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டி:

மேல் அடுக்குகள்: ரூ.. 900 
D H பிளாக்கள்: ரூ. 1500
C K பிளாக்கள்: ரூ. 2500
B L பிளாக்கள்: ரூ. 3000

இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறினால், நவம்பர் 16-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.

டிக்கெட்களை எங்கே வாங்குவது..? 

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அதிகாரப்பூர்வ ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இணையதளம் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் . கூடுதலாக, BookMyShow, Paytm மற்றும் Paytm Insiders போன்ற பிரபலமான தளங்களில் டிக்கெட் கிடைக்கும். மேலும், ரசிகர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான ஆஃப்லைன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 மைதானங்கள் 48 போட்டிகள்: 

2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது 48 போட்டிகள் 10 ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் கடைசியாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget