போட்டிக்கு தயாரா..? டி20 உலகக் கோப்பை வார்ம் அப் மேட்சுக்கான அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!
அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வார்ம் அப் மேட்சுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வார்ம் அப் மேட்சுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்தது. எப்போது இந்த தொடர் தொடங்கும் என்று அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துவரும் நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வார்ம் அப் மேட்சுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
The warm-up matches ahead of the ICC Men's #T20WorldCup 2022 begin on October 10.
— ICC (@ICC) September 27, 2022
Full fixture list for all 16 teams 👇https://t.co/5uTzZN58nx
அதன்படி, அக்டோபர் 10ம் தேதி தொடங்கும் முதல் வார்ம் அப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், இந்திய அணி வருகிற அக்டோபர் 17 ம் தேதி ஆஸ்திரேலியா அணியையும், 19 ம் தேதி நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது.
வார்ம் அப் போட்டிக்கான முழு அட்டவணை : (இந்திய நேரப்படி)
- அக்டோபர் 10 - வெஸ்ட் இண்டீஸ் vs ஐக்கிய அரபு அமீரகம் (காலை 5.30 மணி)
- அக்டோபர் 10 - ஸ்காட்லாந்து vs நெதர்லாந்து (காலை 9.30 மணி)
- அக்டோபர் 10 - இலங்கை vs ஜிம்பாவே (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 11 - நமீபியா vs அயர்லாந்து (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 12 - வெஸ்ட் இண்டீஸ் vs நெதர்லாந்து (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 13 - ஜிம்பாவே vs நமீபியா (காலை 5.30 மணி)
- அக்டோபர் 13 - இலங்கை vs அயர்லாந்து (காலை 9.30 மணி)
- அக்டோபர் 13 - ஸ்காட்லாந்து vs ஐக்கிய அரபு அமீரகம் (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 17 - ஆஸ்திரேலியா vs இந்தியா (காலை 9.30 மணி)
- அக்டோபர் 17 - நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா (காலை 9.30 மணி)
- அக்டோபர் 17 - இங்கிலாந்து vs பாகிஸ்தான் (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 17 - ஆப்கானிஸ்தான் vs வங்காளதேசம் (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 19 - ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் (காலை 8.30 மணி)
- அக்டோபர் 19 - வங்காளதேசம் vs தென்னாப்பிரிக்கா (மதியம் 1.30 மணி)
- அக்டோபர் 19 - நியூசிலாந்து vs இந்தியா (மதியம் 1.30 மணி)