Ian Chappell Retires: முன்னாள் வீரர் இயான் சேப்பல் எடுத்த முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!
புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் சேப்பல் கிரிக்கெட் வர்ணனையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டரும், பிரபல வர்ணனையாளரருமானவர் இயான் சேப்பல். 78 வயதான இயான் சேப்பல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, முழு நேர வர்ணனையாளராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில், இயான் சேப்பல் தனது வர்ணனையாளர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள இயான் சேப்பல் வர்ணனையாளர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து மீண்டுவிட்டாலும் அது எனக்கு கடினமாகவே இருக்கிறது என்றார். பயணங்களின்போதும், படிகளின் மீது ஏறும்போது மிகவும் கடினமாக இருப்பதாவும் இயான் சேப்பல் கூறியுள்ளார். இந்த காரணங்களினால் தற்போது இயான் சேப்பல் கிரிக்கெட் வர்ணனை பணியில் இருந்து விலகியுள்ளார்.
இயான் சேப்பல் ஆஸ்திரேலிய அணியின் வீரராக மட்டுமின்றி, வெற்றிகரமான கேப்டனாகவும் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வர்ணனை உலகிலும் ஜாம்பவனாக வலம் வந்த இயான் சேப்பல் வர்ணனையில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Independence Day 2022: ஜிம்பாப்வேயில் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்திய வீரர்கள்.. எங்கே தெரியுமா?
78 வயதான இயான் சேப்பல் 1943ம் ஆண்டு பிறந்தவர். இவர் 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 345 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 14 சதங்களும், 26 அரைசதங்களும் அடங்கும். 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 673 ரன்களை விளாசியுள்ளார். 16 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களை விளாசியுள்ளார். அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 30 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பலின் அண்ணன் இயான் சேப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 1980ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இயான் சேப்பல் சுமார் 45 ஆண்டுகள் கிரிக்கெட் வர்ணனை உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.
மேலும் படிக்க : T20 Highest Runs : மீண்டும் நம்பர் 1..! ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மார்டின் கப்தில்..!
மேலும் படிக்க : Dhoni: 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஹர்பஜனுக்கு தோனி கொடுத்த அட்வைஸ் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்