Shreyas Iyer Injury: அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் ஸ்ரேயாஸ்..! உலகக்கோப்பையில் இருந்து விலகல்?
Shreyas Iyer Injury: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்:
இந்தியாவில் இந்த ஆண்டு 16வது ஐ.பி.எல். சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ளது. அதில் கொல்கத்தா அணியின் முழுநேர கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தால், தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இருந்தும் வெளியேறியுள்ளதாக விளையாட்டுச் செய்திகளை பிரதானமக வெளியிடும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், கடந்த ஆண்டு கீழ் முதுகில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால், பயிற்சியைத் தொடங்குவதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் வங்காளதேச சுற்றுப்பயணத்தின் போது, கீழ் முதுகில் வீக்கம் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சை:
இதனால் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் போட்டித் தொடரில் இந்திய அணியில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறினார். பின்னர் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது அதன் பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் தவறவிடுவார் என்றும், ஆனால் போட்டியின் இரண்டாம் பாதிக்கு திரும்பலாம் என்றும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய அறிக்கையின்படி, தொடர்ச்சியான கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் இப்போது அறுவை சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காயத்தால் தடுமாறும் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மருத்துவ ஊழியர்கள் ஸ்ரேயாஸ் ஐயரின் காயத்தைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்கிறது, குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே காயத்தினால் அவதிப்பட்டு வருவதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களின் காயங்களை மிகவும் எச்சரிக்கையாக கையாள்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக நிதிஷ் ராணா முதல்முறையாக அணியை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏப்ரல் 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2023ஆம் ஆண்டுக்கான லீக் ஆட்டங்களை தொடங்கியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படியான தகவல் இந்திய அணிக்கு சரிவாக கருதப்படுகிறது.