மேலும் அறிய

T20 World Cup 2024 Squad: டி20 உலகக் கோப்பை..சஞ்சு சாம்சன் தான் என்னோட தேர்வு; கெவின் பீட்டர்சன் அதிரடி!

ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து இருப்பேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17 இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் நடைபெற உள்ளது. அதாவது இந்த தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

என்னுடைய முதல் தேர்வு:


முக்கியமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது. அதேபோல் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிசனும் இந்த போட்டியில் இருக்கின்றனர்.  இந்நிலையில் இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து இருப்பேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசுகையில், “இன்னும் சில வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் இந்திய அணியின் விமானத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு கேப்டனாக இருந்தும் கௌரவங்கள் வழங்கப்படவில்லை என்ற அழுத்தத்துடன் நிறைய போராடுகிறார். அவர் ரன் எடுக்கும் விதம் மற்றும் பேட்டிங் செய்யும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது. எனவே நான் தேர்வாளராக இருந்தால் டி20 உலக்க கோப்பைக்கான எனது முதல் தேர்வுகளில் அவர் ஒருவராக இருப்பார்” என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.

சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்:

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கபடும் வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவருக்கான வாய்ப்பை பிசிசிஐ முறையாக வழங்கவில்லை என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதங்கம். இச்சூலில் கெவின் பீட்டர்சன் இப்படி கூறியிருப்பது டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் சீசனில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 385 ரன்களை குவித்து இருக்கிறார். அதேபோல், இவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஐபிஎல் சீசன் 17ன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது மேலும் ப்ளேஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?

மேலும் படிக்க:Gukesh Chess: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget