Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஹர்திக்... கேப்டன் பொறுப்பில் இருந்து கழட்டிவிடப்பட்ட ரோஹித்!
ஐபிஎல் 2024 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐபிஎல் 2024:
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த சீசனுக்கு முன்னதாக தற்போது அந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள் என அனைத்து வகையான பட்டியலையும் வெளியிட்டு விட்டன.
இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் பதிவு செய்திருந்தாலும் ஏலத்தில் 333 வீரர்களே இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது.
புதிய கேப்டன்:
இச்சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி, இதற்கு முன்னதாக தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. அதன்படி, அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்தது. அதேபோல், பாண்டியா தலைமையில் குஜராத் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. இந்நிலையில் தான் ரோஹித் சர்மாவின் வயதை கணக்கிட்டு இனி வரும் 5 ஆண்டுகளுக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது .
அதேநேரம், ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
To new beginnings. Good luck, #CaptainPandya 💙 pic.twitter.com/qRH9ABz1PY
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
மேலும் படிக்க: MS Dhoni: சச்சினுக்கு அடுத்து தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: பிசிசிஐயின் அதிரடி முடிவு
மேலும் படிக்க: Gautam Gambhir: டி20 தொடரில் ரவி பிஷ்னோய் புறக்கணிப்பு... ’அத மட்டும் பண்ணிடாதீங்க...’ பிசிசிஐ மீது கம்பீர் காட்டம்!