Gambhir on Kohli: “இனி விராட் கோலி இதைதான் செய்ய வேண்டும்” - கம்பீரின் பகிரங்க அட்வைஸ்
விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி விலகல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலியின் முடிவுக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ’கேப்டன்சி பொறுப்பு என்பது பிறப்பிலேயே வகுக்கப்படுவது அல்ல. இனி, விராட் கோலி அணிக்கு ரன்கள் சேர்க்க வேண்டும். அதுவே இப்போது முக்கியம்” என கவுதம் கம்பீர் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று முன் தினம் விலகினார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.
தீடிரென நேற்று முன் தினம் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி விலகல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
இந்நிலையில் விராட் கோலியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவரது பங்குக்கு கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதில், “கேப்டன்சி பொறுப்பு என்பது பிறப்பிலேயே வகுக்கப்படுவது அல்ல. இனி, விராட் கோலி அணிக்கு ரன்கள் சேர்ப்பதில் கவனல் செலுத்த வேண்டும். அதுவே இப்போது முக்கியமான விஷயமாகும். இந்திய அணிக்காக விளையாட கனவு கண்டபோது, கேப்டனாக வேண்டும் என யாரும் கனவு காண்பது இல்லை. இந்திய அணி வெற்றிகளை குவிக்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே விளையாடுவோம். ஒரு வீரராக களமிறங்கும்போது பெரிதாக எந்த மாற்றமுமில்லை, டாஸ் போட செல்வது, ஃபீல்ட் செட் செய்வது போன்ற வேலைகள் மட்டுமே இல்லாமல் போகுமே தவிர, அதே உத்வேகத்துடன்தான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருத வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்