அது வேற வாய்.. இது நாற வாய்! அப்போ ரோகித் Best Captain- இப்போ? கம்பீரை ரவுண்டு கட்டி பொளக்கும் நெட்டிசன்ஸ்
Gautam Gambhir : ரோகித் வெள்ளை பந்து கிரிக்கெட் அல்லது டி20 கிரிக்கெட்டில் கேப்டனாகவில்லை என்றால், அது அவமானம்" என்று கம்பீர் பழைய வீடியோவில் கோபமாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியைப் பாராட்டிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோகித் நீக்கம்:
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது, இதில் ரோகித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தனர்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இருவரும் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ரோகித் இந்திய அணியின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்ட வைரலான வீடியோவில்,கம்பீர் ரோகித்தின் கேப்டன்சியின் ஐபிஎல் கேப்டன்சியை பாராட்டியை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அது வேற வாய் இது நாற வாய்:
அவர் பேசியுள்ள அந்த வீடியோவில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகவில்லை என்றால், அது இந்தியாவின் துரதிர்ஷ்டம், ரோஹித் சர்மாவுக்கு அல்ல. அவர் வெள்ளை பந்து கிரிக்கெட் அல்லது டி20 கிரிக்கெட்டில் கேப்டனாகவில்லை என்றால், அது அவமானம்" என்று கம்பீர் பழைய வீடியோவில் கோபமாக பேசியுள்ளார்.
"இது ஒரு அவமானம், ஏனென்றால் ரோஹித் சர்மாவால் இதை விட வேறு எதுவும் செய்ய முடியாது," என்று அவர் கூறினார்
Never seen anyone more hypocritical and two-faced than Gautam Gambhir. The same guy who once said, “If Rohit Sharma doesn’t become India’s captain, it’s India’s loss, not Rohit’s,” now doesn’t want him as captain after becoming coach himself. pic.twitter.com/pqRzYKDR2a
— Kusha Sharma (@Kushacritic) October 4, 2025
கேப்டன்சியில் கலக்கிய ரோகித்:
ரோஹித் இந்தியாவை 56 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி, 42 போட்டிகளில் வெற்றி , 12 போட்டிகளில் தோல்வி, ஒன்று போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது, மற்றொன்று டையில் முடிந்தது. கேப்டனாக 75% வெற்றி சதவீகித ரெக்கார்ட் அவரை இந்திய அணியில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக உள்ளார்
ரோஹித்தின் தலைமையில், இந்தியா 2018 மற்றும் 2023 ஒருநாள் ஆசியக் கோப்பையை வென்றது, 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, இந்த ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் அவரது தலைமையில் வென்றது.
46 ஒருநாள் போட்டிகளில், ரோகித் 45 போட்டிகளில் 1,963 ரன்கள் எடுத்தார், சராசரியாக 47.87 மற்றும் 116.84 ஸ்ட்ரைக் ரேட், இதில் மூன்று சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும். இந்த கட்டத்தில், குறைந்தபட்சம் 20 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த எந்த வீரரும் ரோஹித்தை விட சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்ட்ரைக் ஆடியதில்லை.





















