Gautam Gambhir: ”விராட் கோலியுடனான ஃப்ரெண்ட்ஷிப்.. மசாலா போட தேவையில்ல”: கவுதம் கம்பீர் பளிச்
கோப்பையை வென்ற பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பற்றி கம்பீர் பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இத பதவிக்கு கவுதம் கம்பீர் ஒரு வலுவான போட்டியாளராக பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து கம்பீரோ, பிசிசிஐயோ எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. டி20 உலகக் கோப்பை 2024 வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
கவுதம் கம்பீருக்கு கொக்கிபோட்ட பிசிசிஐ:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மூன்றாவது ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்து சென்ற பெருமை கவுதம் கம்பீருக்கு உண்டு. இந்த வெற்றியை அடுத்து பிசிசிஐ இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் உள்நாட்டு கட்டமைப்பை நன்கு அறிந்த ஒரு வேட்பாளரை நாங்கள் தேடுகிறோம் என்று பிசிசிஐ வாரிய செயலாளர் ஜெய் ஷா முன்பு கூறியிருந்தார். முன்னதாக, விவிஎஸ் லட்சுமணனை தலைமை பயிற்சியாளராக கொண்டு வர பிசிசிஐ முயற்சித்தது. ஆனால், உடன்பாடு இல்லை என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சுமண் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக உள்ளார்.
மறுபுறம், டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கம்பீர் பயிற்சியாளராக இருந்தால் கோலியின் கேரியரில் சிக்கல் ஏற்படும் என சிலர் தெரிவிக்கின்றன. முன்னதாக, 20 காலக்கட்டத்தில் ஜான் ரைட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அப்போது, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியை, பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறிவைத்து, அணியில் இருந்து தூக்கியதாக கூறப்படுகிறது.
தற்போது கம்பீர்தான் பயிற்சியாளர் என்று அறிவித்தால், கங்குலிக்கு ஏற்பட்ட கஷ்டத்தை கோலியும் சந்திக்க நேரிடும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன.
கோப்பையை வென்ற பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பற்றி கம்பீர் பேசினார். இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசிய கவுதம் கம்பீர், "இந்த கருத்து உண்மைக்கு புறம்பானது. விராட் கோலிக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. தன்னை வெளிப்படுத்தி அந்தந்த அணிகளின் வெற்றிக்கு உதவ என்னைப் போலவே அவருக்கும் உரிமை உண்டு. பொதுமக்களுக்கு மசாலா கொடுப்பது அல்ல எங்கள் உறவு” என்றார்.
ஐபிஎல் 2024 இன் போது, கௌதம் கம்பீர் போட்டியின் போது விராட் கோலியை கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். இது பலருக்கு பிடித்திருந்தது. ஆனால் சிலர் இதை பற்றி அதிகமாக சமூக வலைதளங்களில் விவாதித்து கொண்டு வந்தனர். கடந்த சீசனில் அதாவது ஐபிஎல் 2023ல் கம்பீர் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். இம்முறையும் இருவருக்குள்ளும் வார்த்தைப் போரை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த முறை இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பறிமாறி கொண்டனர்.