Jos Buttler: உலகக் கோப்பைத் தோல்வி! மீண்டும் கேப்டனாக தொடரும் பட்லர் - வெற்றிப்பாதைக்கு திரும்புமா இங்கிலாந்து?
உலகக் கோப்பைத் தோல்விக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி நோக்கி நகர்ந்துள்ள இந்த உலகக் கோப்பைத் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து படுதோல்விகளுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பைத் தோல்வி:
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் தவிர மற்ற அனைத்து அணிகளுடனும் இங்கிலாந்து அணி தோற்றது அந்த அணியின் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தது.
இதையடுத்து, உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ள இந்த தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த தருணத்தில், கேப்டனாக ஜோஸ் பட்லரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மீண்டும் கேப்டனாக பட்லர்:
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டிக்கான அணியில் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். ரெஹன் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி ப்ரூக், ப்ரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், லிவிங்ஸ்டன், ஒல்லி போப், பில் சால்ட், ஜோஷ் டங் மற்றும் ஜான் டர்னர் இடம்பிடித்துள்ளனர்.
டி20 தொடருக்கான அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில், ரெஹன் அகமது, மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், லிவிங்ஸ்டன், டைமல் மில்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், ரீஸ் டோப்ளே, ஜான் டர்ன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அவரது பேட்டிங் மிகவும் கவலைக்குரிய வகையில் இருந்தது. தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ஜோஸ் பட்லர் உலகக்கோப்பையில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு இங்கிலாந்து அணியை புத்துணர்ச்சியுடன் ஆட வைப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும் படிக்க: IND vs NED LIVE Score: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.. தாக்குப்பிடிக்குமா நெதர்லாந்து அணி..?
மேலும் படிக்க: Babar Azam Captaincy: பதவி விலகுகிறாரா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்..? கிரிக்கெட் வாரியத்தின் முடிவு? வெளியான தகவல்!