மேலும் அறிய

Cricketer Natarajan: கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் பல இளைஞர்களை என்னைப்போல் உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு - கிரிக்கெட் வீரர் நடராஜன்

திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி ஆர்.வி.அரங்கில்  நடைபெற்றது. கல்லூரி செயலர் கோ.மீனா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குனர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி முதல்வர் கெஜலெட்சுமி, துணை முதல்வர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், யார்க்கர் மன்னன் என்ற புகழ்பெற்றவருமான நடராஜன் சிறப்பு விருந்தினராகவும், திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும், மீட்புத்துறையின் அலுவலர் அனுசுயா கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் நித்யா  விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார்.  இதனை தொடர்ந்து கல்லூரி தலைமை செயல் அதிகாரி, நடராஜனை பாராட்டி பேசினார். பின்னர் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியதாவது: மாணவிகளாகிய நீங்கள் கல்லூரி அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் சாதனை செய்ய வேண்டும். பல திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கிருந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும்.

Cricketer Natarajan: கிராமங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

மேலும் ஒரு கிராமத்தில் இருந்து வந்து என்னால் சாதிக்க முடிந்தது என்றால், நீங்கள் இங்கிருந்து மிகப்பெரிய இடத்துக்கு செல்ல முடியும். அதற்கு நான் முன்னுதாரணம். கடைக்கோடியில் இருக்கும் பல இளைஞர்களை என்னைப்போல் உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு. விளையாட்டு மட்டுமின்றி, நீங்கள் சாதிக்க விரும்பும் எந்த துறையானாலும் கடின உழைப்புடன் ஈடுபட்டால் வெல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய விளையாட்டு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைத்து இளநிலை துறையை சேர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாமாண்டு வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவி நாகவர்ஷினி மற்றும் அனைத்து முதுநிலை துறையை சேர்ந்த மாணவிகளில் வெற்றி பெற்ற முதுநிலை இரண்டாமாண்டு இயற்பியல் துறையை சேர்ந்த மாணவி ஆர்.கே.ஷோபிகா ஆகியோருக்கு கோப்பைகள், கேடயங்களை வழங்கினார். பின்னர் கல்லூரியின் பல்வேறு துறை மாணவிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்ற கணினி அறிவியல் துறை மாணவிகளுக்கு கேடயம் வழங்கியும், பல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை பேராசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக மாணவி நதியா வரவேற்றார். முடிவில் கல்லூரி மாணவி ஸ்ரீநிதி நன்றி கூறினார். இதில்  கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget