
Commonwealth Cricket 2022: காமன்வெல்த்தில் பதக்கம் சேர்க்கும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி..
Commonwealth Womens Cricket 2022: இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Commonwealth Womens Cricket 2022: இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 8 ஃபோர், மூன்று சிக்ஸர் உட்பட 61 ரன்கள் விளாசியுள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை ஃப்ரெயா கெம்ப் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடிய இந்திய அணி, போட்டியின் 20 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
India progress to the final of the Commonwealth Games with a 4-run win over England! #ENGvIND | #B2022
— Cricbuzz (@cricbuzz) August 6, 2022
👉 https://t.co/aaYbjENTAQ pic.twitter.com/jGhfWpVmlK
FINALS, here we come 💥💙💪#TeamIndia #GoForGlory pic.twitter.com/wSYHmlv3rb
— BCCI Women (@BCCIWomen) August 6, 2022
இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது என்றாலும், ரன் குவிப்பில் கவனம் செலுத்தி வந்தது. போட்டியின் இறுதி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. இதனால், நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையின் அணியின் கேப்டன் நட்டாலி சேவியர் 41 ரன்களும், அணியின் மற்றொரு வீராங்கனை டேனியலீ 35 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதளவில் சோபிக்காததல் இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், காமன்வெல்த் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

