மேலும் அறிய

KL Rahul on Virat: வெளியே பேசுறவங்க கருத்தை விராட்கோலி இப்படிதான் ஹேண்டில் பண்ணுவார்.. தோள்நின்ற கே.எல்.ராகுல்

விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் துபாயில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் இந்தத் தொடரில் விராட் கோலியின் செயல்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எப்போதும் நாங்கள் உற்று நோக்கி பார்த்து இருப்போம். ஏன்னெறால் இந்த இரண்டு அணிகளும் இதுபோன்ற தொடர் அல்லாமல் தனியாக வெளியே விளையாடுவதில்லை. ஆகவே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்பாக என்ன நடந்திருந்தாலும் போட்டியின் போது எல்லாம் புதிதாக தான் தொடங்கும். இரண்டு அணிகளும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கும்.

 நாங்கள் அனைவரும் விராட் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். அதேசமயம் நாங்கள் அவருடைய ஃபார்ம் குறித்து வருந்த தேவையில்லை. விராட் கோலியின் மனநிலை இப்போதும் மாறவில்லை. அவருடைய எண்ணம் தற்போது இந்தியாவிற்காக போட்டிகளை வென்று தருவதே என்று உள்ளது. அவர் எப்போதும் வெளியே இருப்பவர்களின் கருத்துகளை கேட்டு விளையாட மாட்டார். 

அவரைபோன்ற ஒரு உலக தரம் வாயந்த வீரருக்கு இது போன்ற நெருக்கடி புதிதல்ல. அவர் தற்போது சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயிற்சிக்கு செல்லும் போது அவருடன் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிதி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காயம் அடைந்துள்ள ஷாஹின் அஃப்ரிதியிடன் கோலி நலம் விசாரிக்கிறார். அதைத் தொடர்ந்து கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஷாஹின் அஃப்ரிதி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஷாஹின் அஃப்ரிதி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் பாகிஸ்தான் அணியுடன் அங்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!
Asian Games: சிங்கப்பெண்களும் நாங்கதான்.. தங்கப்பெண்களும் நாங்கதான்.. கோல்ட் மெடல் வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி!
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
Embed widget