Chennai Formula 4 Race: சென்னை கார்பந்தயம்... டிக்கெட் விலையை அறிவித்த விளையாட்டு ஆணையம்... எவ்வளவு தெரியுமா?
Chennai Formula Racing: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விலையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று (நவம்பர் 28) வெளியிட்டுள்ளது.
![Chennai Formula 4 Race: சென்னை கார்பந்தயம்... டிக்கெட் விலையை அறிவித்த விளையாட்டு ஆணையம்... எவ்வளவு தெரியுமா? Chennai Formula Racing Tickets Price Details Sports Development Authority Announced Know Details Chennai Formula 4 Race: சென்னை கார்பந்தயம்... டிக்கெட் விலையை அறிவித்த விளையாட்டு ஆணையம்... எவ்வளவு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/3eecbf46fa34814cb9409ee7cae67a7a1701180192162732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஃபார்முலா கார் பந்தயம்:
மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கார்களை பார்ப்பது என்பதில் அனைவருக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதைத் தான் ஃபார்முலா பந்தயங்களாக சர்வதேச அளவில் நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளை தொலைக்காட்சிகளில் தான் இந்தியர்களால் காண முடியும்.
இந்நிலையில் தான் இந்திய கார் பந்தய ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம் நடைபெற உள்ளது. டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனையும் தற்போது தொடங்கியுள்ளது.
டிக்கெட்டுகளை எங்கு வாங்கலாம்:
சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை, பேடிஎம் இன்சைடரில் இருந்து ரசிகர்கள் வாங்கலாம். டே பாஸ் மற்றும் வீக் எண்ட் பாஸ் ஆகவும் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெறலாம்.
டிக்கெட் விவரம்:
இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கான கட்டண விவரத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று (நவம்பர் 28) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 3,999 ரூபாய், இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் 6,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் 1,2,3,4,5 டிக்கெட் கட்டணம் 1,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499 , Gold Lounge ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் Gold Lounge டிக்கெட்டின் விலை 13,999 ரூபாய்க்கும், Platinum Lounge கட்டணம் 12,999 மற்றும் வார இறுதி நாட்களில் 19,999 ரூபாய் எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
போட்டி விவரம்:
போட்டிக்காக சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும்
நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் ஃபார்முலா 4 சர்வதேச கார்பந்தயம் நடைபெறுவதும், குறிப்பாக இரவு பந்தயமாக நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் படிக்க: Pro Kabaddi 2023: முதல் கோப்பையைத் தட்டித் தூக்குமா தமிழ் தலைவாஸ்; இதுவரை கோப்பைகள் வென்ற அணிகள் விபரம்
மேலும் படிக்க: Roshan Ranasinghe: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்: அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)