Champions Trophy : மினி உலகக்கோப்பை தொடங்கியது இப்படி தான்! சாம்பியன் டிராபி பற்றிய சுவாரஸ்ய தகவல்
Champions Trophy 2025 : 1998 ஆம் ஆண்டு போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது சாம்பியன்ஸ் டிராபி முன்னர் ஐ.சி.சி நாக்அவுட் டிராபி என்று அழைக்கப்பட்டது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது.உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைப்பெறவுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரின் வரலாறு பற்றி இதில் காண்போம்
1998 ஆம் ஆண்டு போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது சாம்பியன்ஸ் டிராபி முன்னர் ஐ.சி.சி நாக்அவுட் டிராபி என்று அழைக்கப்பட்டது. டெஸ்ட் விளையாடாத நாடுகளில் விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் முயற்சியில் நாக்அவுட் டிராபி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயரை போல இந்தப் போட்டி நாக்அவுட் வடிவத்தில் நடத்தப்பட்டது, இதை மினி உலகக்கோப்பை என்றும் அழைத்தனர். 1998-ல் நடந்த முதல் தொடரில் ஒன்பது அணிகள் பங்கேற்றன, அது 2000 ஆம் ஆண்டில் நடந்த தொடரில் 11 அணிகளாக அதிகரித்தது.
பின்னர் 2002 ஆம் ஆண்டு நாக் அவுட் கோப்பை தற்போதுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையாக பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு சாம்பியம்ஸ் டிராபி தொடரிலும் அணிகளின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது, அதிகபட்சமாக 2004 ஆம் ஆண்டு நடந்த தொடரில் (12 அணிகள்) இருந்தது. இருப்பினும், 2009 ஆண்டு முதல் சாம்பியன்ஸ் டிராபியில் எட்டு அணிகள் பங்கேற்று வருகின்றன
எட்டு அணிகளும் நான்கு அணிகளாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தியா இரண்டு முறை போட்டியை வென்றுள்ளது. முதலாவது 2002 ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், இரு நாடுகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.
1998 ஐசிசி நாக் அவுட் டிராபி
வெற்றியாளர்கள்: தென்னாப்பிரிக்கா; இரண்டாம் இடம்: மேற்கிந்திய தீவுகள்
1998 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் நாக் அவுட் டிராபியில் ஒன்பது அணிகள் பங்கேற்றன. நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே அணியை ஆரம்பப் போட்டியில் எதிர்கொண்டது. நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், ஸ்டீபன் ஃப்ளெமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி, காலிறுதியில் இலங்கையிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியா, அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகளை தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது.
2000 ஐசிசி நாக் அவுட் கோப்பை
வெற்றியாளர்கள்: நியூசிலாந்து; இரண்டாம் இடம்: இந்தியா
கென்யாவில் நடைபெற்ற இந்தப் தொடரில் பதினொரு அணிகள் பங்கேற்றன. தரவரிசையில் மிகக் குறைந்த ஆறு அணிகள் நாக்சுற்றில் மோதின். இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகியவை காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
இந்தியா அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, அங்கு அவர்கள் நியூசிலாந்தை எதிர்கொண்டனர். இறுதிப்போட்டியில் இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து. முதல் ஐசிசி பட்டத்தை தட்டிச் சென்றது.
2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
கூட்டு வெற்றியாளர்கள்: இந்தியா மற்றும் இலங்கை
2002 முதல், நாக் அவுட் கோப்பை பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று அறியப்பட்டது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் நான்கு குரூப்களாக பிரிக்கப்பட்டது. இந்தியா இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேயுடன் 2வது பிரிவில் இடம் பெற்றது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிடம் பிடித்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது, இதில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் (எட்டு புள்ளிகள்) முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதிக்கொண்டன. கொழும்பில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. கேப்டன் சனத் ஜெயசூர்யா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் அரைசதங்கள் மொத்தம் 244/5 ரன்களை எட்ட வழிவகுத்தன. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டபோது இந்தியா இரண்டு ஓவர்களுக்குப் பிறகு 14/0 என்ற நிலையில் இருந்தது.
பின்னர் போட்டி ஒரு ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்டது, அங்கு ஆட்டம் புதிதாகத் தொடங்கியது. இலங்கை முதலில் பேட்டிங் செய்து 222/7 ரன்கள் எடுத்தது. இந்தியா 38/1 என்ற இலக்கை நோக்கிச் சென்றபோது மழை மீண்டும் ஆட்டத்தை பாதித்தது, இறுதியில் கோப்பை பகிரப்பட்டது.
2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
வெற்றியாளர்கள்: மேற்கிந்திய தீவுகள்; இரண்டாம் இடம்: இங்கிலாந்து
இங்கிலாந்தில் நடைபெற்ற 2004 சாம்பியன்ஸ் டிராபியில் 12 அணிகள் பங்கேற்றன. அமெரிக்கா இந்தப் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் கென்யாவுடன் குரூப் சி-யில் இருந்தது, ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இந்தியா குரூப் சுற்றிலேயே வெளியேறியது. இந்தியா மற்றும் கென்யா இரண்டையும் வீழ்த்திய பாகிஸ்தான், நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, ஆனால் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்தது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்தை 217 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 114/6 என்ற நிலையில் சிக்கலில் இருந்தது, ஆனால் ஷிவ்நரைன் சந்தர்பால் (47), இயன் பிராட்ஷா (34*) மற்றும் கோர்ட்னி பிரவுன் (35*) ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேடித்தந்தனர்.
2006 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
வெற்றியாளர்கள்: ஆஸ்திரேலியா; இரண்டாம் இடம்: மேற்கிந்திய தீவுகள்
2006 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் 4 அணிகள் தகுதிச்சுற்றில் மோதின், அதன் பின்னர் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின. ஷேன் வாட்சனின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2009 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
வெற்றியாளர்கள்: ஆஸ்திரேலியா; இரண்டாம் இடம்: நியூசிலாந்து
2009 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது, இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது. இந்தியா ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் குரூப் ஏ-யில் இருந்தது, இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின ஷேன் வாட்சனின் அபார சதத்தால் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - இங்கிலாந்து
வெற்றியாளர்கள்: இந்தியா; இரண்டாம் இடம்: இங்கிலாந்து
இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியை எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 20 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை முதல் முறையாக கோப்பை வென்றது.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி- இங்கிலாந்து
வெற்றியாளர்கள்: பாகிஸ்தான்; இரண்டாம் இடம்: இந்தியா
2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது . இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளைக் கொண்ட இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

