Watch Video: கையிலே ஆகாசம்..ஒரே கையில் நீ செஞ்ச சாகசம் - மிரள வைத்த மேக்ஸ்வேலின் கேட்ச் வீடியோ!
பிக்பேஷ் லீக் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வேல் பிடித்த கேட்ச் வேகமாக வைரலாகி வருகிறது.
![Watch Video: கையிலே ஆகாசம்..ஒரே கையில் நீ செஞ்ச சாகசம் - மிரள வைத்த மேக்ஸ்வேலின் கேட்ச் வீடியோ! BBL11: Australian Cricketer Glenn Maxwell's one hand catch against Brisbane heats goes viral in Twitter Watch Video: கையிலே ஆகாசம்..ஒரே கையில் நீ செஞ்ச சாகசம் - மிரள வைத்த மேக்ஸ்வேலின் கேட்ச் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/17/d294c2e2a3e8031692bcfbf52dff467c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கியமான டி20 லீக் தொடர்களில் ஒன்று பிக்பேஷ் லீக். இந்த டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மெல்பேர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேயின் ஹீட்ஸ் அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி போட்டியை வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சின் போது கேப்டன் மேக்ஸ்வேல் பிடித்த கேட்ச் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
மெல்பேர்ன் ஸ்டார்ஸ் பந்துவீச்சின் போது ஆட்டத்தின் 16ஆவது ஓவரை நாதன் கூடர்நைல் வீசினார். அவர் வீசிய பந்தை சேம் ஹிஸ்லட் வானத்தை நோக்கி தூக்கி அடித்தார். அப்போது அந்தப் பந்தை மேக்ஸ்வேல் லாவகமாக தாவி ஒரே கையில் பிடித்தார். இந்த கேட்ச் தொடர்பான வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் ட்விட்டர் கணக்கு பகிர்ந்து இருந்தது. அந்தக் கேட்சை பார்த்து பலரும் இந்து பிக்பேஷ் லீக் தொடரின் சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த கேட்ச் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
"Degree of difficulty = 10" – Andrew Symonds
— cricket.com.au (@cricketcomau) January 16, 2022
Extraordinary grab from Glenn Maxwell! One of the catches of the summer #BBL11 | BKT Golden Moment pic.twitter.com/01HmBs9VPK
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக இருக்கும் மேக்ஸ்வேல் அவ்வப்போது இதுபோன்று ஃபில்டிங்கில் அசத்துவது வழக்கம். அந்தவகையில் தற்போது அவர் பிடித்த கேட்ச் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் போட்டியின் போது வர்ணனையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ,"இது பிபிஎல் தொடரின் சிறந்த கேட்ச்" எனக் கூறினார். அதேபோன்று வர்ணனையில் இருந்த மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,"இது மிகவும் கடினமாக கேட்ச். இதை மேக்ஸ்வேல் பிடித்து என்னால் நம்பமுடியவில்லை" எனக் கூறினார்.
GLENN MAXWELL!
— 7Cricket (@7Cricket) January 16, 2022
WHAT A CATCH! 😱#BBL11 pic.twitter.com/czENSVwG2s
What a stunner 😱👏🏻
— Mohit (@iammohit13_) January 16, 2022
Mad Mannn Maxiiii💥💥
— Sharukh (@StanMSD) January 16, 2022
மேலும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்...! ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்...! விரைவில் அறிவிப்பா...?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)