IND vs BAN 1st TEST: பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா... வெற்றியே பெறாத வங்கதேசம்.. யாருக்கு சாதகம்?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இன்று தொடங்க இருக்கும் முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் நடைபெறும். டிசம்பர் 22 முதல் 26 வரை தேசிய மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஹெட் டூ ஹெட் :
இந்தியா - வங்கதேச அணிகள் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இந்தியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஒருமுறை கூட தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
விளையாடிய போட்டிகள்: 11
- இந்தியா -9
- வங்கதேசம் - 0
- டிரா - 2
அதிக ரன்கள்:
பேட்ஸ்மேன் | போட்டிகள் | ரன்கள் | ஆவ்ரேஜ் | அதிகபட்ச ரன்கள் | 50s/100s |
சச்சின் டெண்டுல்கர் (IND) | 7 | 820 | 136.66 | 248* | 0/5 |
ராகுல் டிராவிட் (IND) | 7 | 560 | 70.00 | 160 | 1/3 |
முஷ்பிகுர் ரஹீம் (BAN) | 6 | 518 | 51.80 | 127 | 2/2 |
விராட் கோலி (IND) | 4 | 392 | 78.40 | 204 | 0/2 |
முகம்மது அஷ்ரப் (BAN) | 6 | 386 | 42.88 | 158* | 2/1 |
அதிக விக்கெட்கள்:
பந்து வீச்சாளர்கள் | போட்டிகள் | விக்கெட்கள் | ஆவ்ரேஜ் | சிறந்த பந்துவீச்சு | ஸ்ட்ரைக் ரேட் |
ஜாகீர் கான் (IND) | 7 | 31 | 24.25 | 7/87 | 38.2 |
இஷாந்த் சர்மா (IND) | 7 | 25 | 20.88 | 5/22 | 38.8 |
இர்பான் பதான் (IND) | 2 | 18 | 11.88 | 6/51 | 21.0 |
அஷ்வின் (IND) | 4 | 16 | 23.12 | 5/87 | 47.1 |
அனில் கும்ப்ளே (IND) | 4 | 15 | 16.53 | 4/55 | 32.4 |
இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சார் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ்,உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
வங்கதேச அணி:
ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), யாசிர் அலி, என் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்
இந்த போட்டி ஜஹூர் அகமது மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.