மேலும் அறிய

Bangladesh vs India 1st Test: இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - மழை குறுக்கிடுமா?

IND vs BAN 1st Test: இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

IND vs BAN 1st Test: இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் மூன்று ஒருநாள் போட்டி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நாளை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் வங்காள தேச அணி 2 - 1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது. மேலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முழுநேரக் கேப்டன் ரோக்த் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்படவே, அவர் வங்கதேச தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியை இந்த தொடரின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் வழிநடத்தி வந்தார். டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுலே அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

மழை குறுக்கிடுமா?

சட்டோகிராமில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக பாதிக்கப்படாது.

எனினும், மாலை நேரங்களில் பனி பொழிவு இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் இருந்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதில் இதுவரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் இதுவரை வங்காளதேச அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. 11 போட்டிகளில்  இந்திய அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. 

ஏற்கனவே ஒருநாள் தொடரினை வென்றுள்ள வேகத்தில் சொந்த மண்ணில் களமிறங்கும் வங்காளதேச அணி டெஸ்ட் போட்டியிலும் வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி  தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று நாடு திரும்ப, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:

ஷுப்மான் கில், கே.எல். ராகுல் (கேப்டன்), சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரீகர் பாரத், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி , அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார்.

வங்கதேச தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணி:

நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், கலீத் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஹசன், யாசிர் அலி, ஜாகிர் ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா

இந்த போட்டி ஜஹூர் அகமது மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
Embed widget