மேலும் அறிய

Babar Azam: ஆப்கானிஸ்தானிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான்.. கதறி அழுத கேப்டன் பாபர் அசாம்.. வெளிவந்த உண்மை..!

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி தோல்வி கண்ட நிலையில், முன்னாள் வீரர் முகமது யுசுஃப் முக்கிய தகவல் ஒன்ற வெளியிட்டுள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி தோல்வி கண்ட நிலையில், முன்னாள் வீரர் முகமது யுசுஃப் முக்கிய தகவல் ஒன்ற வெளியிட்டுள்ளார். 

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியது. இதுவரை இல்லாத வகையில் மூத்த அணிகள் சொதப்ப, கத்துக்குட்டி அணிகள் எல்லாம் கத்துக்கிட்ட மொத்த  வித்தையையும் இறக்கியது போல மிரட்டி வருகிறது. அப்படி ஒரு போட்டி தான் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாகவே விளையாடியது. கேப்டன் பாபர் அசாம் அதிகப்பட்சமாக 74 ரன்கள் விளாச அந்த அணி 50 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சென்னை மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெறுவது கடினம் என சொல்லப்படும் நிலையில் அசால்ட்டாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. 

அந்த அணியை பற்றி தவறாக கணித்ததே பாகிஸ்தான் அணி தோல்வியடைய காரணமாக அமைந்தது. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என சொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அஃப்ரிடி பந்துவீச்சை எல்லாம் துவம்சம் செய்தனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். அந்த அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. முன்னதாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது. ஒரே உலகக்கோப்பையில் முதல்முறையாக  2 போட்டியில் வெற்றி பெற்ற பெருமையையும் ஆப்கானிஸ்தான் பெற்றது. 

பாகிஸ்தான் அணியின் தோல்வியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருவதால் அந்த அணி வீரர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த தோல்விக்கு கேப்டன் பாபர் அசாமின் தவறான கேப்டன்சி காரணம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பாபர் அசாமுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு ஓய்வறையில் கேப்டன் பாபர் அசாம் கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மட்டும் இந்த தோல்விக்கு காரணம் அல்ல,ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி வீரர்களும், நிர்வாகமும் தான் என விமர்சித்துள்ளார். கடினமான நேரங்களில் நாம் பாபர் அசாமுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget