மேலும் அறிய

David Warner: சச்சினின் நீண்ட கால சாதனையை அடித்து நொறுக்கினார் டேவிட் வார்னர்.. கிரிக்கெட்டின் பெஸ்ட் ஓப்பனரா?

கிரிக்கெட் உலகின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரிவில் நீண்ட காலமாக இருந்த, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஆஸ்திரேலிய விரர் டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை, டேவிட் வார்னர் தகர்த்துள்ளார். 

தென்னாப்ரிக்கா - ஆஸ்திரேலியா தொடர்:

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், புளோம்பாண்டீன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது, டேவிட் வார்னர் 106 ரன்களையும்,  மார்னஸ் லபுசக்னே 124 ரன்களையும் குவிக்க, ஆஸ்திரேலிய அணி  50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி, வெறும் 269 ரன்களை சேர்த்து மொத்தமாக ஆட்டமிழந்தது. இதனால், 123 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

வார்னர் படைத்த புதிய சாதனை:

தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக வார்னர் அடித்த சதம் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுக்கும் 20வது சதமாகும். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க விரர்களின் பிரிவில் நீண்ட காலமாக சச்சின் டெண்டுல்கர் வசமிருந்த சாதனை ஒன்றை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார். அதாவது, தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சச்சின் சாதனை தகர்ப்பு:

சர்வதேச கிரிக்கெட்டில் 346 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 45 சதங்களை பூர்த்தி செய்து இருந்தார். இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் 343 போட்டிகளில் 428 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், தொடக்க வீரராக தனது 46வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 25, ஒருநாள் போட்டிகளில் 20 மற்றும் டி-20 போட்டியில் ஒரு சதம் ஆகியவை அடங்கும். ஆனால், சச்சின் டெண்டுல்கர் வெறும் 342 இன்னிங்ஸ்களிலேயே தொடக்க ஆட்டக்காரராக 45 சதங்களை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிட்டையே, தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் விளாசிய விரர்களின் பட்டியலில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 39 சதங்களுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறார்.

பேட்டிங்கில் அசத்தல்:

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில், டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், 29 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தொடங்கிய வார்னர்,  144 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,136 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 179 ரன்களை குவித்துள்ளார். டெஸ்டில், 199 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 8,487 ரன்களை எடுத்துள்ளார். 109 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 335 ரன்களை குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 100 ரன்களுடன் மொத்தமாக 2,894 ரன்கள் சேர்த்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget