IND VS AUS 1ST TEST: இந்திய அணி அபார பந்துவீச்சு.. சுழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நாக்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் மூலம் 63.5 ஓவர்களில் அந்த அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுசக்னே 49 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியின் மூல்ம் சூர்யகுமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர், இந்திய அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.