AUS vs ENG: மார்க் வூட்டை கேட்ச் பிடிக்கவிடாமல் தடுத்த மேத்யூ வேட்... ட்விட்டரில் வெளுக்கும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ...!
இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் மேத்யூ வேட் செய்த செயல் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் டி20 போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அசத்தினர். அலெக்ஸ் ஹேல்ஸ் 51 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 84 ரன்கள் விளாசினார். பட்லர் 32 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சற்று சொதப்பியதால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது மேத்யூ வேட் மார்க் வூட் வீசிய பந்தை அடித்தார். அந்தப் பந்து மேலே சென்றது. அப்போது மேத்யூ வேட் மார்க் வூட் பந்தை பிடிக்க வரும்போது அவரை தள்ளிவிட்டார்.
Cheating by Matthew Wade.#AUSvENG #ENGvAUSpic.twitter.com/1zkwa0LLw4
— Cricket Hotspot (@AbdullahNeaz) October 9, 2022
இது கிரிக்கெட் விதிகளின் படி ஃபீல்டரை பேட்ஸ்மேன் தடுக்கும் செயல். இதற்கு முறையிட்டால் நடுவர்கள் அவுட் தரலாம். எனினும் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அதற்கு முறையிடவில்லை. இதன்காரணமாக மேத்யூ வேட் தொடர்ந்து களத்தில் இருந்தார். அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அவர் எப்படி களத்தில் தொடர்ந்தார் என்று பலரும் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இப்படி செய்த பிறகு நடுவர்கள் எப்படி அவரை தொடரவிட்டனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Why didn't the onfield umpires rule Wade out here? If a batter is caught by a fielder and the opposition doesn't appeal, will the umpires allow the batter to carry on? https://t.co/gES0cK64ji
— Venkata Krishna B (@venkatatweets) October 9, 2022
Mathew Wade has obstructed the field. Continuing the Aussie tradition. Cheaters to the core! #AUSvENG #markwood #mathewwade#T20WC2022 https://t.co/AFBnDKOBmk
— Adil Abbas Ghazi (@Adilabbasghazi) October 9, 2022
That could be a foul even in football. #AUSvENG https://t.co/4neGGrWdmn
— SKT (@sumeetktri) October 9, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.