AFG vs SL : பேட்டிங்கில் மிரட்டிய குர்பாஸ்..! 176 ரன்களை சேஸ் செய்யுமா இலங்கை..?
ஆசிய கோப்பையில் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் சூப்பர் 4 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதின. இதில், டாஸ் வென்று இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹசரதுல்லா ஷசாயும், குர்பாசும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 46 ரன்களை எட்டியபோது ஷசாய் 16 பந்துகளில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இப்ராஹிம் ஜட்ரான் – குர்பாசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக, குர்பாஸ் இலங்கையின் பந்துவீச்சில் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசினார். குர்பாசை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
Innings Break!
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 3, 2022
A Stunning batting display from AfghanAtalan! 👌 👌
8️⃣4️⃣ for @RGurbaz_21
4️⃣0️⃣ for @IZadran18
1️⃣7️⃣ for @iamnajibzadran
1️⃣7️⃣5️⃣ on the board! Enough???
Over to our bowlers now. 👍 👍#AfghanAtalan | #AsiaCup2022 | #AFGvSL pic.twitter.com/lFI1gyMICP
8⃣4️⃣ Runs
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 3, 2022
4️⃣5️⃣ Balls
4️⃣ Fours
6⃣ Sixes
Just @RGurbaz_21 things! 🎇 🎇#AfghanAtalan | #AsiaCup2022 | #AFGvSL pic.twitter.com/geZvDFh7da
அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 135 ரன்களை எட்டியபோது அதிரடி காட்டிய குர்பாஸ் அவுட்டானார். அரைசதம் கடந்த அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 84 ரன்கள் விளாசி அவுட்டானார், அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இப்ராஹிம் ஜட்ரானும் 38 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கடந்த போட்டியில் அதிரடி காட்டிய நஜிபுல்லா ஜட்ராஜ் 10 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முகமது நபி 1 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை அணியில் மதுசங்கா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கை அணியில் பெர்னாண்டோ, மதுஷனகா, கருணரத்னே, சனகா ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். தற்போது, இலங்கை அணி 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது. .
மேலும் படிக்க : ZIM Won AUS : ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே..! 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! உற்சாகமான ரசிகர்கள்
மேலும் படிக்க : Sachin Congratulates Serena: என்ன ஒரு உத்வேகமூட்டும் பயணம்...ஓய்வு பெற்ற செரீனா வில்லியம்ஸ்.. வாழ்த்திய மாஸ்டர் பிளாஸ்டர்!