South Africa New T20 Captain : விலகிய பவுமா: டி-20 போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?
South Africa New T20 Captain : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக ஐடன் மார்க்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ஐடன் மார்க்ராம் (Aiden Markram) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு 20 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 87 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது.
புதிய கேப்டனாக ஐடன் மார்க்ராம்
இந்நிலையினல், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஐடன் மார்க்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயதாகும் ஐடன் மார்க்ராம் 19-வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் கேப்டனாக அணி வாகை சூட காரணமாக இருந்தவர். தெம்பா பவுமா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.




















