Naveen-ul-Haq Retirement: 24 வயதிலேயே இருந்து ஓய்வு.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட கிரிக்கெட் வீரர்!
வருகின்ற உலகக் கோப்பை முடிவுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன் என ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் - உல் - ஹக் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் - உல் - ஹக், வருகின்ற 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
ஆப்கன் வீரர் ஓய்வு:
24 வயதே ஆன ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் - உல் - ஹக் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த வடிவத்தில் இவரது சிறந்த பந்துவீச்சு 4/42 ஆகும்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது நாட்டிற்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். வருகின்ற உலகக் கோப்பை முடிவுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
View this post on Instagram
மேலும் அவர் ,” எனது நாட்டிற்காக டி20 கிரிக்கெட்டில் இந்த நீல ஜெர்சியை தொடர்ந்து அணிவேன், இது எளிதான முடிவு அல்ல. எனது விளையாட்டு வாழ்க்கையை நீடிக்க இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டும் @afghanistancricketboard க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் எனது ரசிகர்கள் அனைவரும் தங்களின் ஆதரவிற்கும் மாறாத அன்பிற்கும் நன்றி” என்றார்.