AFG vs PAK: கிண்டலடித்த ரசிகர்கள்! 1168 பந்துகளுக்கு பிறகு பவர்பிளேயில் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான்..!
ஒருநாள் போட்டியில் பவர்பிளேயில் 1168 பந்துகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி சிக்ஸர் அடித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று(அக்டோபர் 23) சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் நடைபெற்று வரும் 22 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது.
அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
முன்னதாக, பாகிஸ்தன் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்த 4 போட்டிகளிலும் பவர்பிளேயில் அந்த அணி ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை.
பவர்பிளேயில் முதல் சிக்ஸர்:
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுமார் 1168 பந்துகளுக்கு பின்னர், பவர்பிளேயில் முதல் சிக்ஸரை அந்த அணி அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா ஷபீக் அந்த சிக்ஸரை அடித்தார்.
இதனிடையே, இன்றைய போட்டிக்கு முன்னதாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் இதுவரை சிக்ஸர்கள் அடிக்காதது பற்றி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், “சில சிக்ஸர்களை அடிக்க ஆரம்பிக்க கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக அதிக புரதத்தை சாப்பிட வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதத்தை எழுப்பியது. ஒரு சில ரசிகர்கள், ”சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா? முதலில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யுங்கள்! என்று இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக:
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தும்போது கூட பவர்பிளே ஓவர்களில் ஒரு சிக்ஸரைக்கூட பாகிஸ்தான் அணியால் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 2 ஆட்டங்களில் தோல்வி என பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் -0.456 என்ற ரன் ரேட்டுடன் 4-வது இடத்தில் உள்ளது.
அதேநேரம் இனி வரும் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு தகுது பெற முடியும் என்பதால், தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: குல்தீப் யாதவ் வீசிய வேகப்பந்து! மிரண்டு போன மிட்செல் - நீங்களே பாருங்க
மேலும் படிக்க: Bishan Singh Bedi Dies: இந்திய கிரிக்கெட்டின் சுழல் ஜாம்பவான் பிஷன்சிங் பேடி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி