விண்வெளி நிலையம் பராமரிப்புக்காகவும், டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் ஆகியவற்றின் மேற்பரப்பு பொருள் மாதிரிகளை சேகரிக்கவும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டார்.
அப்போது விண்வெளியில் அதிக நடைபயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர் பெக்கி விஸ்டன் முன்னதாக இந்த சாதனையை படைத்திருந்தார்.
அவர் மேற்கொண்ட 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார்.
இது அமெரிக்க சார்பிலான 92வது ஸ்பேஸ்வாக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுனிதா வில்லியம்ஸிற்கு இது 9வது ஸ்பேஸ் வாக் என்பதும், அவருடன் பயணித்த புட்ச் வில்மோர்க்கு இது 5வது ஸ்பேஸ் வாக் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், கேப்சூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக தற்போது வரை பூமிக்கு திரும்ப முடியவில்லை.
7 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளார்.