மேலும் அறிய

Rohit Sharma: கேப்டன்சியில் மன்னன்! 5 மகுடங்களை சூடிய அரசன்! முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மா சாம்ராஜ்யம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை சாம்பயின் பட்டம் வென்று கொடுத்த ரோகித்சர்மாவின் கேப்டன்சி முடிவுக்கு வந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத அதிரடி பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் ரோகித்சர்மா. ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற யாரும் தொட முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ள ரோகித்சர்மா, ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகரமான கேப்டனாக உலா வருகிறார்.

கேப்டன் ரோகித்சர்மா:

இந்த நிலையில், ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பு வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனிமேல் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரோகித்சர்மா ரசிகர்களுக்கும், மும்பை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் தனது சகாப்தத்தை தொடங்கியவரின் திறமையை கண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தன்பக்கம் இழுத்துக் கொண்டது. அம்பானியின் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடங்கப்பட்ட முதல் 2008ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடினாலும், சச்சின், ஹர்பஜன், பாண்டிங் என ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அப்போதுதான், 2013ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் பாதியிலே கேப்டனாக பாண்டிங் கேப்டன்சியை ரோகித்சர்மாவிடம் ஒப்படைத்தார்.

சாம்பியன் கேப்டன்:

அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பொற்காலம் பிறந்தது என்றே கூறலாம், அந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் தோற்ற மும்பை அணி அந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இறுதிப்போட்டியில் சென்னையை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அதுவரை சாம்பியன் மகுடமே சூடாத மும்பைக்கு அந்த மகுடத்தைங  சூட்டி அழகு பார்த்தவர் ரோகித்சர்மா. அடுத்த தொடர் முதல் ரோகித்சர்மா புதிய அவதாரம் எடுத்தார் என்றே சொல்லலாம். அதுவரை ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவனாக உலா வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமபலமான அணியாகவும், சவாலான அணியாகவும் மும்பையை மாற்றிக் காட்டினார் ரோகித். அதற்கு அவர் பெற்றுக் கொடுத்த சாம்பியன் பட்டங்களே சான்றாகும்.

தோனிக்கே சவால் தந்தவர்:

ரோகித்சர்மா தலைமையில் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, இஷன் கிஷன், பும்ரா, போல்ட் என நட்சத்திர பட்டாளங்கள் புடைசூழ ஐ.பி.எல். ஆடும் அத்தனை அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது. ஐ.பி.எல். தொடரின் ராஜாவாக உலா வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இதில், 2013, 2015, 2019 ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ரோகித்சர்மா கைப்பற்றினார். கேப்டன்சி என்றாலே ரோகித்சர்மா என்று கூறும் அளவிற்கு ஐ.பி.எல். தொடரில் அபாரமாக அவர் செயல்பட்டதைத் தொடர்ந்து, அவரை இந்திய அணிக்கான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பி.சி.சி.ஐ. நியமித்தது.

ஆனால், கடந்த 3 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதும், மிகவும் மோசமான தோல்வியை அவர்கள் சந்தித்ததும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டாலும் ரோகித்சர்மா கேப்டன்சி அபாரமான பேட்டிங்கை வௌிப்படுத்தினார்.

முடிவுக்கு வந்த கேப்டன்சி:

இந்த சூழலில், திடீரென அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ள ரோகித்சர்மா இதுவரை 243 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 1 சதம், 42 அரைசதம் உள்பட 6 ஆயிரத்து 211 ரன்களை குவித்துள்ளார். இதில் சிக்ஸர் மட்டும் 257 ஆகும்.

ஐ.பி.எல். தொடரில் கேப்டன்சியின் மன்னனாகவும், சிக்ஸ் அடிப்பதில் அசுரனாகவும் திகழ்ந்த ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால ஐ.பி.எல். கேப்டன்சி முடிவுக்கு வந்திருப்பது வருத்தமான ஒன்றே ஆகும். இருப்பினும் ஒரு வீரராக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்தலாக ஆடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget