Cricket Century 2022: விராட், வில்லியம்சன், வார்னர் கிரிக்கெட் வாழ்க்கையை வசந்தமாக்கிய 2022..!
2022 விளையாட்டு உலகில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதிலும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்கள் சிலர், சில ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசினர்.
2022 விளையாடு உலகில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதிலும் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்கள் சிலர், சில ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசினர்.
விராட்கோலி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் விளாசினார். வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார்.
அந்த ஆட்டத்தில் அவர் 91 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
3 ஆண்டுகளுக்கு சதம் அடித்த புஜாரா
3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா சதம் விளாசினார். 52 இன்னிங்சுகளுக்குப் பிறகு அவர் சதம் விளாசினார்.
130 பந்துகளில் 13 பவுண்டரிகளுரன் 102 ரன்கள் எடுத்தார். இதுவே அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் இதுவாகும். 87 பந்துகளில் அரை சதத்தை அடித்த புஜாரா, அடுத்த 43 பந்துகளில் 50 ரன்களை அடித்து தனது 19வது சதத்தை பூர்த்து செய்தார். முதல் இன்னிங்ஸில் புஜாராம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பார்ம் அவுட் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் இருந்து அவரது ஆட்டம் வேறு மாதிரியாக அமைந்தது.
ஒரே ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் 1,094 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியாக, புஜாரா ஜனவரி 2019 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதன்பிறகு நீண்டலாக சத வறட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்தார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு வார்னர் சதம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தை 45 ரன்களுடன் ஆஸ்திரேலியா இன்று தொடங்கியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்தினர். தனது 100வது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வார்னர், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசினார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம்சன் சதம்
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வில்லியம்சன் சதம் விளாசினார்.
கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார். மொத்தம் 21 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 395 பந்துகளில் 200 ரன்களை வில்லியம்சன் விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 5வது இரட்டை சதம் ஆகும்.
194.5ஆவது ஓவரில் அவர் தனது 5வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் சவுதீ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 612 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் பின்னிலையுடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.