1983 Players Match Fee: ’என்னது இவ்வளவுதானா?’ - 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் தினப்படி.. ஷாக்கிங் விவரம்..
1983 உலகக்கோப்பைக்கு பின் நாடு திரும்பிய இந்திய அணிக்கு வழங்கப்பட்ட தினப்படி விவரம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது
1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது.
ஆனால், இன்றிலிருந்து சுமார் 38 ஆண்டுகள் முன்னோக்கி, அதாவது 1983ம் ஆண்டில் இருந்து இந்திய அணியை பார்த்தால் “இது தேறாது… அது அவ்ளோதான்.. கதை முடிஞ்சது” என்று சொல்வார்களே அதுபோன்றுதான் இருந்தது. ஆனால், அந்த முடிந்த கதையை சகாப்தமாக மாற்றிய எழுதியவர்தான் கபில்தேவ். இதனால்தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றை கபில்தேவிற்கு முன், கபில்தேவிற்கு பின் என்றே பிரிக்கலாம். அப்பேற்பட்ட சாதனை வீரனான கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகியுள்ள “83” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில், 1983 உலகக்கோப்பைக்கு பின் நாடு திரும்பிய இந்திய அணிக்கு வழங்கப்பட்ட தினப்படி விவரம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது. 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கான தினப்படி விவரம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாளொன்றுக்கு 200 ரூபாயும், மூன்று நாட்களுக்கு 600 ரூபாயும், கூடவே ஒரு போட்டிக்கு 1500 ரூபாயும் என மொத்தம் 2100 ரூபாய் ஒரு வீரருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கேப்டன் கபில் தேவ், துணை கேப்டன் மொயிந்தர் அமர்நாத் என மொத்தம் 14 வீரர்களுக்கும், இந்திய அணி மேலாளர் பிஷன் பேடிக்கும் இதேதான் தினப்படியாக வழங்கப்பட்டிருக்கிறது.
Each one of them deserve 10 Cr. pic.twitter.com/BzBYSgqit6
— Makarand Waingankar (@wmakarand) July 16, 2019
இந்திய கிரிக்கெட்டிற்கு கங்குலி, தோனி என்று ஜாம்பவான் கேப்டன்கள் இருந்தாலும், தன்னம்பிக்கையே இல்லாத, துளியளவும் கிரிக்கெட் காதலே இல்லாத அணியை அழைத்துக்கொண்டு உலககோப்பையை வென்றவர் கபில்தேவ். அதனால்தான இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் கபில்தேவிற்கு பிறகு பிரகாசமாக ஒளிரத்தொடங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்