CWG 2022 Weightlifting: காமன்வெல்த் பளுதூக்குதலில் மேலும் ஒரு வெள்ளி... வரலாறு படைத்த விகாஸ் தாகூர்.. !
காமன்வெல்த் பளுதூக்குதலில் ஆடவருக்கான 96 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் ஆடவருக்கான 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் விகாஸ் தாகூர் பங்கேற்றார். இவர் முதலில் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 149 கிலோ எடையை தூக்கி அசத்தினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 153 கிலோ எடையை தூக்கினார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இவர் 155 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவின் முடிவில் அதிகபட்சமாக 155 கிலோ எடையை தூக்கி மூன்றாவது இடத்தில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் விகாஸ் தன்னுடைய முதல் வாய்ப்பில் 187 கிலோ எடையை தூக்கினார். அடுத்து அவருடைய இரண்டாவது முயற்சியில் இவர் 191 கிலோ எடையை தூக்கி அசத்தினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 198 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் முடியவில்லை. கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 191 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் மொத்தமாக இவர் 346 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
🥈2014 Glasgow
— The Bridge (@the_bridge_in) August 2, 2022
🥉2018 Gold Coast
🥈2022 Birmingham
Three back-to-back medals for Vikas Thakur at the #CommonwealthGames 💥🇮🇳
(Screengrab: Sony)#B2022 | #CommonwealthGames2022 pic.twitter.com/afDU5c7xRF
முன்னதாக
மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பூனம் யாதவ் பங்கேற்றார். இவர் முதலில் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 95 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினும் அந்த முயற்சியில் இவர் 95 கிலோ எடையை தூக்கவில்லை.
அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 95 கிலோ எடையை தூக்கினார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இவர் 98 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவின் முடிவில் கனடா வீராங்கனை மாயா லாய்லருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தார். மாயா லாய்லர் ஸ்நாட்ச் பிரிவில் 100 கிலோ எடையை தூக்கியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தன்னுடைய முதல் வாய்ப்பில் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். இரண்டாவது முயற்சியிலும் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 116 கிலோ எடையை தூக்காமல் ஃபவுல் செய்தார். இதனால் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் ஒரு வாய்ப்ப்பில் கூட சரியாக தூக்கவில்லை இதன்காரணமாக அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்