Nikhat Zareen : காமன்வெல்த் பெண்கள் பிரிவு குத்துச்சண்டையின் முதல்முறையாக தங்கம் : வென்று அசத்திய நிக்கத் ஜரீன்
Commonwealth Games 2022: 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான குத்துச் சண்டையில் முதல் முறையாக இந்தியாவுக்காக தங்கம் வென்று தந்துள்ளார் நிக்கத் ஜரீன்.
Commonwealth Games 2022: 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான குத்துச் சண்டையில் முதல் முறையாக இந்தியாவுக்காக தங்கம் வென்று தந்துள்ளார் நிக்கத் ஜரீன். இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்தின் மெக்நால் என்ற வீராங்கனையை வென்று தங்கம் வென்றுள்ளார் நிக்கத் ஜரீன்.
#CommonwealthGames2022 | India boxer Nikhat Zareen wins Gold in 48-50 Kg flyweight category pic.twitter.com/lz9PXrsufy
— ANI (@ANI) August 7, 2022
காமன்வெல்த் போட்டி மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டு இருக்கிறது. போட்டி தொடங்கியதில் இருந்து காமன்வெல்த் நாடுகள் பதக்கங்களை பெற தொடர்ந்து முனைப்புடன் விளைடாடி வருகின்றது. போட்டியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளான இன்று (ஆகஸ்ட், 7) நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவினருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் நிக்கத் ஜரீனும் வடக்கு அயர்லாந்தின் மெக்நால் என்ற வீராங்கனையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக சென்ற இந்த இறுதிப் போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியாவின் நிக்கத் ஜரீன் 5-0 என்ற செட் கணக்கில் வடக்கு அயர்லாந்தின் மெக்நாலை வீழ்த்தி காமன்வெல்த் 2022 ஆம் ஆண்டிற்கான 50 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டில் முதல் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தங்கம் வென்றிருப்பது 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் வெல்லப்பட்ட முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்று நடந்த மற்றொரு போட்டியான 45 கிலோ முதல் 48 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் மற்றும் இங்கிலாந்தின் டேமி ஜேட் ரெஸ்ஜ்டான் நேருக்கு நேர் மோதினர். இந்த போட்டியில் இந்தியாவின் நீது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அவரது சரமாரி குத்துக்களுக்கு இங்கிலாந்து வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால், போட்டியின் முடிவில் இந்திய வீராங்கனை நீது கங்காஸ் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நீது கங்காஸ் இந்தியாவிற்காக நடப்பு காமன்வெல்த்தில் 14வது தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டி வரலாற்றில் இந்தியா குத்துச்சண்டையில் பெற்ற முதல் தங்கம் இதுவாகும். இந்தியாவின் இளம் வீராங்கனையான நீது கங்காஸ் காமன்வெல்த்தில் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும். இவர் காலிறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனையான நிகோல் கிளாய்டை வீழ்த்தினார். இந்தியா பளுதூக்குதலில், ஜூடோ, டேபிள் டென்னிசில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில் குத்துச்சண்டையில் பதக்கம் பெறவில்லை என்ற குறையை நீது கங்காஸ் தீர்த்து வைத்தார்.
இந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் சார்பில் குத்துச்சணடை பிரிவில் வெல்லப்பட்டிருக்கும் இரண்டு தங்கங்களும் இந்தியாவுக்கு பெண்கள் குத்துச் சண்டை சார்பில் வெல்லப்பட்டிருக்கும் தங்க பதக்கங்கள் எனபது வரலாற்று சிறப்பு மிக்க பதக்கங்களாக இடம் பெற்றுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்