மேலும் அறிய

Grandmaster Gukesh D : செஸ் ஜாம்பவான்களுக்கே சிம்ம சொப்பனம்..! யார் இந்த சிங்கக்குட்டி குகேஷ்..?

Chess Olympiad : செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் பி டீமில் இடம்பெற்றுள்ள குகேஷ் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் 6 அணிகள் களமிறங்கிய நிலையில், இந்திய பி அணி மீது தான் அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்திய பி அணியில் இடம்பிடித்துள்ள குகேஷ் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய பி அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரக்ஞானந்தா கடுமையான போராட்டத்திற்கு பிறகு, 85வது நகர்த்தலில் சாண்டோசிடம் வீழ்ந்தார்.


Grandmaster Gukesh D : செஸ் ஜாம்பவான்களுக்கே சிம்ம சொப்பனம்..! யார் இந்த சிங்கக்குட்டி குகேஷ்..?

ஆனால், மற்றொரு தமிழக வீரரான குகேஷ் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவை சந்தித்தார். ஷிரோவிற்கும், குகேஷிற்கும் இடையேயான போட்டி தொடக்கம் முதல் கடும் சவால் நிறைந்ததாகவே இருந்தது. குறிப்பாக, குகேஷ் ஸ்பெயின் வீரருக்கு கடும் சவால் அளித்தார். குகேஷின் சாமர்த்தியமான காய் நகர்த்தலினால் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவ் வீழ்ந்தார். குகேஷின் தொடர்ச்சியான 5வது வெற்றி மூலம் இந்தியாவும் 2.5 -1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த குகேஷ் கூறியதாவது, "அவர் தவறு செய்த பிறகு நான் நல்ல நிலைக்கு சென்றேன். அவர் மெல்ல ஆட்டத்தை விட்டும் வெளியேற்றினேன். அவருடன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஷிரோவ் கேலிபரை வீழ்த்தியது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அவரைத் தூண்டிவிடுவதே எனது உத்தியாக இருந்தது. நான் எதிர்பார்த்த ஆக்ரோஷமான நகர்வுகள் அவரிடம் இருந்து வரவில்லை.” என்றார்.


Grandmaster Gukesh D : செஸ் ஜாம்பவான்களுக்கே சிம்ம சொப்பனம்..! யார் இந்த சிங்கக்குட்டி குகேஷ்..?

2006ம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ் 9 வயதுக்குட்பட்ட ஆசியன் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். ஆசியன் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப்பதக்கத்தை வென்றார். அதில், 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் ரேபிட் சுற்றுகளும் அடங்கும்.

மிக குறைந்த வயதிலே கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை தன்னுடைய 12 வயது 7 மாதம் 17 நாட்களில் படைத்தார்.  ஜூலியஸ் பியர் சேலஞ்சர்ஸ் செஸ் டூர் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் பிரபல கிராண்ட்மாஸ்டர் லீ குவாங் லியாமை மூன்றாவது சுற்றிலே வென்று அனைவரையும் திகைப்படைய வைத்தார்.

கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலகளவில் செஸ் தரவரிசையில் 38வது இடத்திலும், இந்திய அளவில் 4வது இடத்திலும் உள்ளார். சர்வதேச அளவில் பிரக்ஞானந்தா 90வது இடத்தில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் ஜாம்பவான்களை அச்சுறுத்தும் இந்திய பி அணியில் பிரக்ஞானந்தா, அதிபன், குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget