மேலும் அறிய

Sabarimala: சபரிமலையில் கார்த்திகை, மார்கழி சீசன் காலமாக சொல்லப்படுவது ஏன்?

சபரிமலையை பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாக அறியப்படுகிறது இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாக உள்ளது. இது ஏன் என்பது பற்றி பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். அதனைப் பற்றி காணலாம். 

கேரள மாநிலம் பத்தின திட்டா மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதைகளை தேர்ந்தெடுத்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். சபரிமலையை பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாக அறியப்படுகிறது இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. 

அதாவது சூரியனின் ஒளியானது எல்லா கோயில்களின் விக்ரங்கள் மீது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நேரடியாக விழும். உதாரணமாக சென்னையில் மிகவும் பிரபலமான திருவேற்காடு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சூரிய ஒளியானது அம்பாள் மீது விழுவதைக் காணலாம்.  அந்த அமைப்பில் தான் கோயிலையும் கட்டியிருப்பார்கள். அந்த மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இயங்கும் ஒவ்வொரு கோயிலும் அந்த மாதிரி அமைப்பில் கட்டியிருப்பார்கள். சில கோயில்களில் மாசி மாதம், சில கோயில்களில் சித்திரை மாதம் அந்த சூரிய ஒளி படும் நிகழ்வானது இருக்கும். அதற்கேற்ப கோபுர நிழலில் இருந்து சூரிய ஒளி கர்ப்ப கிரகத்தில் உள்ள சுவாமி மீது படும். இது வருடத்திற்கு ஐந்து நாட்கள் அல்லது பத்து நாட்கள் படும். வருடம் முழுவதும் சூரிய ஒளி படுகிற மாதிரி எந்த கோயிலும் வைத்திருக்க மாட்டார்கள். சூரிய ஒளி படும்போது சுவாமியின் பலம் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. 

அப்படியான நிலையில் சபரிமலையில் வருடம் முழுக்க சூரிய ஒளி கோயில் கர்ப்ப கிரகத்தின் மீது விழும். அதனால் பெரும்பாலான நாட்களில் அந்த கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சூரியனின் சக்தி குறைவாக இருக்கும். மழைக்காலம், பனிக்காலம் என்பதால் சூரியன் தாமதமாகத்தான் உதிப்பார். அதனால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் எல்லாம் சபரிமலை நடை திறப்பு இருக்கிறது. 

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்டு கிட்டதட்ட ஒன்றரை மாத காலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.அதன்பிறகு மண்டலபூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 4 நாட்கள் கழித்து நடை திறக்கப்பட்டு இறுதியாக ஜனவரி மாதம் 20 அல்லது 21ம் தேதி நடை அடைக்கப்படும். மற்ற தமிழ் மாதங்களில் மாதப்பிறப்பில் இருந்து 5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Embed widget