Ramanuja Avatar Utsavam: "கோவிந்தா கோவிந்தா” முழக்கம்.. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
Ramanuja Avatar Utsavam : ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படும் ராமானுஜரின் திருத்தேர் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோயில் ( sriperumbudur adikesava perumal temple )
ராமானுஜர் அவதரித்ததால் இது நித்திய சொர்க்கவாசல் தளமாக கருதப்படுகிறது. இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு புராண பெயர் பூதபுரி என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு சொர்க்கவாசல் கிடையாது வைகுண்ட ஏகாதசி அன்று ஆதி கேசவர் மற்றும் ராமானுஜர் இருவரும் பூதகால் மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் இங்கு உள்ள சன்னதி கதவை திறப்பார்கள். இது கோயிலின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. ராகு- கேது தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இங்கு தரிசனம் மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ராமானுஜர் ( Ramanujar - Sriperumbudur )
ஸ்ரீபெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ராமானுஜர், இவருக்கு இளைய ஆழ்வார் என பெற்றோர் பெயர் சூட்டினார். கோயில் எதிரே ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் தற்பொழுது உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் பத்து நாட்களும் ராமானுஜர் எழுந்தருளி தரிசனம் தருவார். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார விழா நடைபெற்று வருகிறது.
1007வது அவதார உற்சவம் ( Ramanuja Avatar Utsavam )
வடம் பிடித்து இழுத்த பெண்கள்
பெண்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வழி எங்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் பாரம்பரிய பானகம் உள்ளிட்டவற்றும் வழியெங்கும் வழங்கினர். அதேபோன்று தேரை இழுத்த பக்தர்களுக்கு, பனை ஓலை விசிறி மூலம் வீசி அவர்களை ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் போக்குவரத்து உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாத்தியங்கள் முழங்க தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா " என கோஷம் எழுப்பியும் பஜனை பாடியும் உற்சாகமாக நடனமாடியும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பேரூராட்சியுடன் கைகோர்த்த தன்னார்வலர்கள்
தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் உணவு பொருட்கள் வழங்கியதால், சாலை முழுவதும் பல்வேறு குப்பைகள் ஏற்பட்டது. குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள் கைகோர்த்து, நகரத்தை தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். ஒருபுறம் தேர் சென்று கொண்டிருக்க பின்னால் வந்த அவர்கள் வேகமாக சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த தேர் திருவிழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாரு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்த் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.