மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. பகல் பத்து உற்சவம் 23-ந் தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக விழாவையொட்டி, ரெங்கநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று (14-ந்தேதி, திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் 12.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் தேதி அறிவிப்பு

பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி தொடங்குகிறது. அதனையடுத்து பகல்பத்து உற்சவம் 23-ந் தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்து முதல் நாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வருவார். அன்று அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (1.1.2023) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் தேதி அறிவிப்பு

இதனை தொடர்ந்து 2.1.2023 (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். அன்றைய தினம் அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 8.1.2023 அன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9.1.2023 அன்று திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 10.1.2023 அன்று தீர்த்தவாரியும், 11.1.2023 அன்று நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2025: ஒருவழியாக வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 88.39% பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Virat Kohli : யப்பா 10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்... விராட் கோலி சொத்து மதிப்பு விபரங்கள்
Virat Kohli : யப்பா 10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்... விராட் கோலி சொத்து மதிப்பு விபரங்கள்
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
CBSE 12th Results 2025: மீண்டும் மாஸ் காட்டியதா சென்னை? சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு - மண்டல வாரியான முடிவுகள் - டாப் யார்?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Pollachi Case: பெண்களே உஷார்.. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்.. நம்ப வைத்து சீரழித்தது இப்படித்தான்!
Embed widget