மேலும் அறிய

Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக கோயில்களில் கோலாகலம்.. பரவசமாய் குவியும் பக்தர்கள்..!

உலகெங்கிலும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று தைப்பூசம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அராதானை நடத்தி வருகின்றனர்.

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்(Thaipusam). தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வார்கள்.

தைப்பூசம்:

தை மாதம் 22ம் தேதி இன்று (பிப்ரவரி 05ஆம் தேதி) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமானது. இது தை 22ஆம் தேதி (இன்று) மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. இன்று பூச நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் ஒன்றாக வருவதால் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் வருகின்றனர்.

தைப்பூசம் கொண்டாடத்தை ஒட்டி பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் 29ஆம் தேதி காலை‌ 9.30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றப்பட்ட நாள் முதல் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா கொண்டுவரப்பட்டது.

தைப்பூச தினத்தை ஒட்டி பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். பலரும் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு முருகனை வழிப்படுவார்கள்.

உலகெங்கிலும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று தைப்பூசம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அராதானை நடத்தி வருகின்றனர். இன்று முருகனுக்கு தங்கம் காப்பு, வெள்ளி காப்பு, ராஜ அலங்காரம் என சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

பழனி முருகன் கோயிலில் காலை 7 மணி நிலவரப்படி 1.5லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இடையூறின்று தரிசனம் செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழனி வரும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு ரயில்கள்:

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை, பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல், கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை, பழனி இடையே இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06080 மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரயில் வண்டி எண் 06079 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

இதேபோல் கோவை, திண்டுக்கல் ரயில் எண் 06077 காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06078 மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget