மேலும் அறிய

Tiruvannamalai Chariot: விண்ணை பிளந்த நமச்சிவாய கோஷம்... திருவண்ணாமலை தேரோட்டம்..!

Tiruvannamalai Karthigai Deepam 2024: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீப உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

நினைத்தாலே முக்தி தரும் ஆன்மீக பூமியாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. சிவபெருமானுக்கு நீர், நிலம்,காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு என்ற ஐந்து பஞ்ச பூதங்களுக்கு தனி கோயில்கள் சிறப்பாக விளங்குகின்றன. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது. அக்னி தலமாக இருப்பதால் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் எப்போதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவின் பொழுது பல லட்சக்கணக்கான மக்கள் தீபத் திருவிழாவை பார்க்க குவிவது வழக்கம். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் அதற்காக 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

புராண பின்னணி என்ன ?

புராண காலத்தில் திருமால் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கிடையே யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவபெருமான் அக்னி உருவெடுத்தார். யார் முதலில் தலையையும் மற்றும் அடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் பெரியவர் என சிவபெருமான் அவர்கள் முன் அசாரியாக தெரிவித்தார். உடனடியாக பன்றி அவதாரம் எடுத்து திருமால் அடியை காண புறப்பட்டார். பிரம்மன் முடியை காண மேல்நோக்கி புறப்பட்டார். ஆனால் இருவராலயும் அடியையும் முடியும் காண முடியவில்லை. இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகவே திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஆண்டு தோறும், கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

தீபத் திருவிழா 2024

இந்த ஆண்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு ஆகிய வேலைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உல்லா பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

தேர் உற்சவம் 

விழாவின் ஏழாம் நாளான இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7 மணியளவில் விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு ‘அரோகரா’ உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

விநாயகர் தேருக்கு பிறகு முருகர் தேர் வலம் வந்தது. அதைத்தொடர்ந்து மகா ரதம் என்றழைக்கப்படும் அண்ணாமலையார் தேரானது மாட வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதனை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.‌ திருவண்ணாமலை மாட வீதிகள் எங்கும், நமச்சிவாய நமச்சிவாய என்ற கோஷங்கள் எழும்பின.

முக்கிய விழாக்கள் எப்போது ? 

டிசம்பர் 11 ஆம் தேதி - காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம் 

டிசம்பர் 12 ஆம் தேதி - காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா  முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.

டிசம்பர் 13  ஆம் தேதி -அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம். 

டிசம்பர் 14 ஆம் தேதி -காலை உற்சவம் - இரவு அயன்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரரா தெப்பல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Instagrammable Destinations: இன்ஸ்டாகிராம் வாசிகளே..! இயர் எண்ட்ல நச்சுன்னு ஃபோட்டோ எடுக்கனுமா? உங்களுக்கான இடங்கள்
Instagrammable Destinations: இன்ஸ்டாகிராம் வாசிகளே..! இயர் எண்ட்ல நச்சுன்னு ஃபோட்டோ எடுக்கனுமா? உங்களுக்கான இடங்கள்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Embed widget