திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தை உத்திர வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் விழாவில் மூலவர் ,சண்முகர் , விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது. பெருமாள், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப்புககழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம நடைபெகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4-00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5-00 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம் நடைபெற்றது.மூலவர் ,சண்முகர் , விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது.பெருமாள், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது.
கடந்த ஆண்டு கொரானோ பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, செந்திலாண்டவனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி வருஷாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.அதனைத்தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தை உத்திர வருசாபிசேகத்தை முன்னிட்டு இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெகிறது. இந்த புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன் மலா்களை இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அழகும் மணமும் கொண்ட நன்மலர்களை வழங்கி வருகின்றனர்.