மேலும் அறிய

Tirupati Tirumala Temple: டிசம்பர் மாதம் திருப்பதி போறிங்களா? விசேஷநாட்களை அறிவித்த தேவஸ்தானம்..

டிசம்பர் மாதம் திருப்பதி திருமலை கோயிலில் நடைபெறும் விஷேச நாடகள் குறித்து திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தினசரி பல்வேறு சேவைகள் நடைபெறும். காலை சுப்பிரபாத சேவை, தோமல சேவை, கல்யாண உற்சவம், தீப அலங்கார சேவை என நடைபெறும். மேலும் இலவச தரிசனமும் நடைபெரும். அந்த வகையில் மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு விஷேசம் தான். பெருமாள் கோய்கிளில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா  கோலகலமாக நடைபெற உள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை இந்த வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

அதேபோல் அடுத்த மாதம் வரக்கூடிய விஷேச நாட்கள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 3 ஆம் தேதி பார்வேத மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம், 8 ஆம் தேதி சர்வ ஏகாதசி, 12 ஆம் தேதி ஆட்சியாய நொச்சவளு ஆரம்பம், 17 ஆம் தேதி தனுர் மாதம் தொடக்கம். டிசம்பர் 22 ஆம் தேதி எழுமலையான் சன்னதியில் சின்ன சாத்தும் முறை நடைபெறுகிறது. 23 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தொடங்குகிறது. அதேபோல் 24 ஆம் தேதி வைகுண்ட துவாதசி அன்று எழுமலையான் சக்ர ஸ்நாணம். 28 ஆம் தேதி பிரணயகலஹ உற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. 

குறிப்பாக வைகுண்ட ஏகாதசியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசன்ம் செய்ய வருவார்கள். மேலும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க வாசல் திறக்கப்படும். இதற்கான சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டையும் தேவஸ்தானம்  செய்து வருகிறது. 

நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம்  டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

அதேபோல, சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசனம் செய்ய ஏதுவாக, டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில 9 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆதாரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sembarambakkam Lake: சென்னை மக்களே உஷார்..! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டது 1,000 கன அடி உபரிநீர்!

தலைப்பு செய்திகள்

கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget