மேலும் அறிய
Advertisement
Kanchipuram Saree : 427 பெருமாள் முகங்கள்.. காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு செல்கிறது காஞ்சி பட்டு.. சுவாரஸ்ய பின்னணி..
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு வழங்கிட பெருமாளின் திருமுகத்துடன் கூடிய பட்டு சேலை காஞ்சிபுரத்தில் தயாரிப்பு.
காஞ்சிபுரத்தில் 427 பெருமாளின் திருமுருகங்களும் 27 ஜோடி யானைகள் உருவமும், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல் உருவம் பதித்து, விரதம் இருந்து, 8 நாட்ளில் இரவு பகல் பாராது கைத்தறியில் நெசவு செய்து அசத்தி உள்ளனர் டிசைனர் தம்பதியினர். பட்டுச்சேலைகளுக்கு உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச்சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார். வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியை வடிவமைத்து தர டிசைனர் தம்பதியினர் முடிவெடுத்தனர்.
அதன்படி குமரவேலு கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், அரங்கநாதர் லட்சுமி தேவியின் படத்தினை வடிவமைத்து இரவு பகலாக கடந்த எட்டு தினங்களாக நான்கு நெசவாளர்கள் துணையுடன் 192 மணி நேரத்தில் பட்டுச்சேலையை நெசவு செய்து தயாரித்து உள்ளனர். அரக்கு கலர் பட்டில் தக்காளி கலர், தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்து 21 1/2 முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் நெசவு செய்துள்ள சேலையின் உடலில் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்ட்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளவாரும், முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் நெய்து சேலையை தயாரித்து உள்ளனர்.
திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் பட்டுச்சேலையை விரதம் இருந்து நெசவு செய்து வழங்கி உள்ளதாக பெரமிதத்துடன் குமரவேலு கலையரசி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion