மேலும் அறிய

Pongal 2023: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோ பூஜை..!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோசாலையில் ஏராளமான மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 

Pongal 2023: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோ பூஜை..!

அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணதிராஜபுரத்தில், கோசாலை அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய், அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 500 -க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் இன்று அங்கு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது.  ஏராளமான பொதுமக்கள் மாடுகளுக்கு பூஜை மற்றும் தீபாராதனை செய்து , வணங்கி உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.

இதேபோன்று மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழாவில், யாகம் வளர்த்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி வடகரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஏராளமான மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மகாகணபதி, கோ லட்சுமி யாகம் நடைபெற்று பூரணாகுதி செய்யப்பட்டது.

Pongal 2023: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோ பூஜை..!

தொடர்ந்து பசுமாட்டிற்கு லட்சுமி பூஜை நடைபெற்று.  பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளை வணங்கி பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர். பூஜைகளை பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்வித்தார்.

மயிலாடுதுறையில் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போலீசார் ஹெல்மெட் அணிந்து  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.. ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் பகுதியில்  ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தலைமையில் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட் அணிந்து வர பொதுமக்களை வலியுறுத்தினர்.

Pongal 2023: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோ பூஜை..!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா வழங்கி ஜெலமேட் அணிந்துவர வலியுறுத்தினார். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இணிப்பு மற்றம் பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடாந்து தஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பணர்’வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் செல்வம் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget