பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் மாவட்டங்களில் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு முன்பாக மாசி, பங்குனி திருவிழாக்கள் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என சுற்றுவட்டாரங்களில் திருவிழாக்கள் கலைகட்டும். இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான அம்மன் கோயில்களில் கிராம மக்கள் திருவிழாக்கள் கொண்டாடுவார்கள். அந்தவகையில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஏராளமான இடங்களில் இருந்து பக்கதர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.#sivagangai | #spiritual | @SRajaJourno | @s_palani | @k_for_krish | #abpnadu pic.twitter.com/YaA0FwG8SC
— arunchinna (@arunreporter92) March 30, 2023
இங்கு பங்குனி திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெ.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ் கூறுகையில்,” நினைத்த காரியங்கள் நிறைவேறும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் துடியானது. திருமண தடை, வீடு கட்டுதல், குடும்ப பிரச்னைகள் தீருதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிறைவேறும். இந்நிலையில் பங்குனி திருவிழா துவங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Panguni Uthiram: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மேலும் செய்திகள் படிக்க - வினையாக மாறிய விளையாட்டு.. மனைவி கண் முன்பே நீரில் மூழ்கி உயிரிழந்த கணவன் - திண்டுக்கல்லில் சோகம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்