நாளை கந்தசஷ்டி திருவிழா; பழனியில் பூஜை நேரம் மாற்றம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
காலை 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் பல்வேறு தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .
இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோவில் பழனி முருகன் கோவில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர்.
வருடந்தோறும் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் சஷ்டிவிழாவையொட்டி பூஜை நேரம் வழக்கத்திற்கு மாறாக மாற்றம் செய்யப்படுகிறது.
பந்த் நடத்தினால் பாஜக மீது நடவடிக்கை... எச்சரித்த நீதிமன்றம்..! ஜகா வாங்கிய அண்ணாமலை..!
இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள நேரம் மாற்றம் குறித்து கூறியிருப்பதாவது, கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து... காரணம் இதுதான்! அறிக்கை மூலம் வெளியான விளக்கம்!
அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும். எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்