மேலும் அறிய

ஐப்பசி மாத அமாவாசை: அன்னபூரணி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இரவு 11.30 மணிக்கு பம்பைமேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்த பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளுவர். இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அருள்பாலிப்பார். தொடர்ந்து மகா தீபாராதனை ஏற்றப்படும். அப்போது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்வார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மாலை மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இரவு 11.30 மணிக்கு பம்பைமேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்த பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளுவர். இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அருள்பாலிப்பார். தொடர்ந்து மகா தீபாராதனை ஏற்றப்படும். அப்போது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்வார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் செல்வது எப்படி?

மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும்,சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது. மற்றும் மேல்மலையனூர் - செஞ்சி, திண்டிவனம், பாண்டிச்சரிக்கும் மேல்மலையனூர் - விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர் -ஆரணி வேலூர் செல்லவும், மேல்மலையனூர் - அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும்,மேல்மலையனூர் - திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது.

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. செஞ்சி-, திண்டிவனம்-, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு நேரடியாக செல்ல சிறப்பு பேருந்து வசதி உள்ளது. மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்

பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!

பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?

Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு

Embed widget